சென்னை, மே 3- வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள், விவசாயிகள் மற்றும் சிறு - குறு தொழில் நிறுவனங்கள், Agri- MSME -களுக்கு அதன் புத்தாக்கமான அக்ரிடெக் தளமான ஃபார்ம் பாஸ் மூலம் டிஜிட்டல் விலைப் பட்டியல் தள்ளுபடி தீர்வை வழங்க மாஸ்டர் கார்டு M1xchange உடனான தனது கூட்டாண்மையை அறிவித்துள்ளது.
கடன் மற்றும் செயல்பாட்டு மூலதனத்தை எளிதாக அணுகுவதுடன், விவசாயிகள் மற்றும் வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் நேரடியாக வாங்குபவர் களுடன் தொடர்பு கொள்ளவும், அவர்களின் விளை பொருள்களுக்கான சிறந்த விலையை பேரம் பேசவும், பணம் செலுத்தவும் மற்றும் உடனடியாக பணம் பெறவும் இந்த தீர்வு அனுமதிக்கும் என 'எம்ஒன் எக்ஸ்சேஞ்' நிறுவன தலைமை செயல் அலுவலர் சுந்தீப் மோஹிந்த்ரூ மற்றும் மாஸ்டர் கார்டு நிறுவன அதிகாரி விகாஸ் வர்மா ஆகியோர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment