பழங்குடியின பெண்கள் தயாரிக்கும் ஆடைகள் விற்பனை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 17, 2023

பழங்குடியின பெண்கள் தயாரிக்கும் ஆடைகள் விற்பனை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்

நீலகிரி, மே 17- தோடர் பழங்குடியின பெண்கள் தயாரிக்கும் எம்ப்ராய் டரி ஆடைகளை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனங்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கைத்தறித் துறை அமைச்சர் காந்தி தெரிவித்தார். 

தோடர் எம்ப்ராய்டரி நெசவா ளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் துவக்க விழா ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மய்யத்தில் நடந்தது. இதை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி துவக்கி வைத்து பேசியதாவது:

இச்சங்கத்திற்காக ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இங்கு தோடர் பழங்குடியின மக் கள் தயாரிக்கும் சால்வை, பேக்கு கள், போர்வை போன்றவை விற் பனை செய்ய நடவடிக்கை எடுக்கப் படும்.

தமிழ்நாட்டில் மாற்றுத்திறனா ளிகள் மற்றும் திருநங்கைகள் முன்னேற்றத்திற்காக கலைஞர் பல்வேறு திட்டங்களை செயல் படுத்தினார். தற்போது மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்படுத்தி வரு கிறார். கல்விக்கும், பெண்கள் முன் னேற்றத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார். 


No comments:

Post a Comment