வெயில்
தமிழ்நாட்டின் சென்னை, வேலூர், மதுரை உள்பட 10 நகரங்களில் கோடை வெயில் 100 டிகிரியை தாண்டி சதம் அடித்தது. சென்னையில 105.26 டிகிரி வெப்பம் பதிவானது.
நியமனம்
சி.பி.அய். இயக்குநராக கருநாடக மாநில காவல் துறை தலைமை இயக்குநர் பிரவீண்சூட் நியமிக்கப்பட்டு உள்ளார்.
அறிவுறுத்தல்
தலைவர்கள் வாழ்ந்த இல்லங்களை பழைமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என்று பொதுப் பணித் துறை அதிகாரிகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.
அனுமதி
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுங்கச் சாவடி அமைக்க கையகப்படுத்திய நிலத்தின் வழிகாட்டி மதிப்பீட்டை 10 மடங்கு அதிகரித்து காட்டிய அதிகாரி களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை தொடர தமிழ் நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
உத்தரவு
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 2023-2024ஆம் கல்வி ஆண்டில் ஜூன் முதல் தேதியிலிருந்து பணி புரியும் வகையில் உபரி ஆசிரியர்களைத் தகுதியுள்ள இடத்துக்கு மே மாதம் 26ஆம் தேதிக்குள் பணி நிரவல் செய்து அதன் அறிக்கையை ஆணையரகத்துக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள் - பள்ளிக் கல்வி ஆணையரகம் உத்தரவு.
அகற்றம்
சென்னை மாநகராட்சி பகுதிகளில் பொது இடங்கள் மற்றும் நடைப்பாதைகளில் இருந்த 1,929 நிரந்தர மற்றும் தற்காலிக ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றப்பட்டு உள்ளன.
அபராதம்
விதிகளை மீறி, நம்பர் பிளேட்டில் சிவப்பு நிறத்தில் ‘அ' ‘ஜி' என்று எழுதியுள்ள அரசு வாகனங்களுக்கு போக்குவரத்து காவலர்கள் அபராதம் விதித்து வருகின்றனர். இதுபோன்ற விதிமீறல் நடப்பது தெரிய வந்தால், பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
தொடக்கம்
தமிழ்நாடு அரசின் எண்ணும் எழுத்தும் திட்டம் வரும் கல்வி ஆண்டில் 4 மற்றும் 5ஆம் வகுப்புகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படுவதை ஒட்டி, வரும் 18ஆம் தேதி மதுரையில் மாநில அளவிலான பயிற்சி தொடங் கப்பட உள்ளது.
தீர்வு
நாடு முழுவதும் நிலுவையிலுள்ள வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஆண்டுக்கு 4 முறை ‘தேசிய லோக் அதாலத்' என்ற மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது. அதன்படி தமிழ் நாடு முழுவதும் சமீபபத்தில் நடைபெற்ற மக்கள் நீதி மன்றங்களில் 80,655 வழக்குகளுக்குத் தீர்வு காணப் பட்டது.
No comments:
Post a Comment