தாம்பரம், மே4 - தாம்பரம் மாநகராட்சிக்குட்பட தனியார் மருத்துவமனைகளில் மருத்துவக் கழிவுகளை முறைப்படி பாய்லர் மூலம் அழிக்காமல் குப்பையில் வீசுவதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராஜ கீழ்பாக்கத்தில் உள்ள பிரபல குழந்தைகள் நலம் மற்றும் பெண்கள் மருத்துவமனையான தனியார் மருத்துவமனை யின் மருத்துவ கழிவுகள் குப்பையில் வீசப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து தாம்பரம் மாநக ராட்சி சுதாதாரத்துறை துப்புரவு ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் ஆய்வு செய்து ஆதாரத்தை திரட்டினர்.
பின்னர் மருத்துவக் கழிவுகளை குப்பையில் வீசிய தனியார் மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தாக்கீது வழங்கப்பட்டது. மேலும் இதுபோல் பொது சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் செயலில் ஈடுபடும் மருத்துவமனை நிர்வாகத்திற்கும் முதல் முறை அபராதமும், தொடர்ச்சியாக ஈடுபட்டால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் அதனை குப்பையில் வீசுவதால் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பலருக்கும் நோய் பரவுகிறது. மேலும் இதனால் அவர்கள் அதிக சிரமத்துக்கு உள்ளாகுகின்றனர். எனவே மருத்துவக் கழிவுகளை முறையாக அழிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment