காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு சென்ற பக்தர்கள் 10 பேர் பரிதாப மரணம்
ஜம்மு, மே.31- காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோவி லில் குழந்தைக்கு மொட்டை போட சென்றபோது பேருந்து பள்ளத்தில் பாய்ந்ததில் 10 பக்தர்கள் பலியானார்கள். 57 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார் கள்.
மொட்டை போடும் நிகழ்ச்சி
பஞ்சாப் மாநிலம் அமிர் தசரஸ் நகரில் இருந்து காஷ் மீரின் கத்ரா நோக்கி ஒருசொகுசு பேருந்து சென்று கொண்டிருந் தது. மலை மீதுள்ள மாதா வைஷ்ணவி தேவி கோவிலுக்கு செல்ல அடிவாரத்தில் உள்ள கத்ராவுக்குத்தான் செல்ல வேண் டும்.
மாதா வைஷ்ணவிதேவி கோவிலில் குழந்தைக்கு மொட்டை போடுவதற்காக அவர்கள் சென்று கொண்டிருந் தனர். அவர்களில் பெரும் பாலா னோர் பீகார் மாநிலம் லக் கிசாரை பகுதியை சேர்ந்தவர்கள்.
அந்த பேருந்து நேற்று காலை 6.30 மணி அளவில், ஜம்மு-சிறீநகர் தேசிய நெடுஞ்சாலை யில் ஜஜ் ஜர் கோட்லி பகுதியில் ஒரு பாலத்தை கடக்க முயன்ற போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடியது.
பாலத்தின் கைப்பிடிச்சுவர் மீது மோதி, அருகில் உள்ள பள்ளத்தில் பேருந்து உருண்டு விழுந்தது.
இந்த கோர விபத்தில், 8பேர் சம்பவ இடத்திலேயே பலியா னார்கள். விபத்து பற்றிய தகவல் அறிந்தவுடன், காவல்துறையினர், மத்திய காவல் படையினர், உள்ளூர் மக்கள் ஆகி யோர் சேர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பலி எண்ணிக்கை அதிகரிக்கும்
பேருந்துசின் சிதைந்த பகுதிகளுக் குள் சிக்கிக்கிடந்த உடல்களை மீட்பது பெரிதும் சிரமமாக இருந்தது. 59 பக்தர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் ஜம்முவில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச் சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
மருத்துவமனையை அடைந்தவுடன் 2 பேர் உயிரி ழந்தனர். மற்ற 57 பேரும் சிகிச்சை பெற்று வரு கிறார்கள். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று மருத்துவ கல்லூரி முதல் வர் சசி சூடன் தெரிவித்தார்.
சாலையின் இடதுபுறமாக சென்று கொண்டிருந்த பேருந்து, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வலது புறத்துக்கு சென்று பாலத்தின் சுவர் மீது மோதியதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித் தனர். பேருந்துசின் முன்பக்க சக் ரங்கள் வெளியே வந்து, பாலத்தின் சுவரில் மாட்டிக் கொண்டன.
விபத்து பகுதிக்கு 2 கி.மீ. தூரத்துக்கு முன்பே இடதுபுற சாலையில் திரும்பினால்தான் கத்ராவுக்கு செல்ல முடியும். ஆனால், பாதையை தவற விட்ட டிரைவர், நேராக சென்று விட்ட தாக உயிர் தப் பியரமேஷ்குமார் என்றபயணி தெரிவித்தார்.
No comments:
Post a Comment