அண்ணாமலை மீது எட்டாம் தேதி வழக்கு டி.ஆர்.பாலு எம்.பி. அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 4, 2023

அண்ணாமலை மீது எட்டாம் தேதி வழக்கு டி.ஆர்.பாலு எம்.பி. அறிவிப்பு

பல்லாவரம்,மே4-தொடர்ந்து என் மீது அவதூறு தகவல்களை வெளியிட்டு வரும் தமிழ்நாடு பா.ஜ.க.  தலைவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என திமுக பொருளாளர், நாடாளு மன்ற மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எச்சரித் துள்ளார்.

பல்லாவரம் அடுத்த பம்மல் மின்வாரிய அலுவலகம் அருகே யுள்ள மைதானத்தில் திமுக செயல் வீரர்கள் கூட்டம் நேற்று முன் தினம் நடைபெற்றது. தாம்பரம் மாநகராட்சி பம்மல் மண்டலக்குழு தலைவர் வே.கருணாநிதி தலைமை வகித்தார்.

கூட்டத்தில், திமுக பொரு ளாளரும் மக்களவை உறுப்பின ருமான டி.ஆர்.பாலு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவ னங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணா நிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து டி.ஆர்.பாலு பேசியதாவது: தி.மு.க. தலைவர் மிகப்பெரிய சவால்களை சந்தித்துக்கொண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு ஆற்ற வேண்டிய கட மைகளை முறைப்படி யாருக்கும் அச்சப்படாமல் தொடர்ந்து ஆற்றி வருகிறார். கலைஞரின் நூற்றாண்டு விழா துவக்கமாக அரசு சார்பில் 1000 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்து வமனை, மதுரையில் மிகப் பெரிய நூலகம், அழகிய கலை நயத்துடன் கூடிய மணிமண்டபம் என்று பல் வேறு தொடர் நிகழ்ச்சி களுடன் ஆண்டு முழுவதும் கொண்டாட திட்டமிடப்பட் டுள்ளது.

10 ஆயிரம் கோடிகளை சம்பா தித்துள்ளதாக என் மீது அவதூறு தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் நான் கொடுத்த சொத்துப் பட்டியல் குறித்த தகவல்கள் அனைத்தும் வெப்சைட் டிலும் உள்ளது.

இதை பார்த்து உண்மையை தெரிந்து கொள்ள லாம். கூடுதலாக ஒரு சென்ட் இடம்கூட என்னிடம் இல்லை. தில்லு இருந்தால் நேரடி யாக களத் தில் சந்திக்கவேண்டும். தொடர்ந்து இதுபோன்ற அவ தூறு பரப்பிவரும் அண்ணாமலை மீது வழக்கு தொடுக்கப்படும்.

அண்ணாமலை என்னை பற்றி தகவல் வெளியிட்டதற்கு, விளக்கம் கேட்டு முதலில் 48 மணி நேரம் கெடு கொடுத்து தாக்கீது வழங்கி னோம். ஆனால் அவரிடமிருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே வரும் 8ஆம் தேதி அவர் மீது சைதாப்பேட்டை நீதிமன் றத்தில் முதலில் கிரிமினல் வழக் கும், அதைத்தொடர்ந்து சிவில் வழக்கும் தொடுக்க உள்ளேன். அவதூறு செய்தியில் 21 நிறுவ னங்கள் எனக்கு சொந்தமானது என கூறியுள்ளார்.

அதில், 3 நிறுவனங்களில் மட்டுமேதான் ஷேர்கள் வாங்கி யுள்ளேன். வேறு எந்த கம்பெனி யிலும் நான் தலைமை பொறுப்பு உள்ளிட்ட எந்த முக்கிய பொறுப் பும் வகிக்கவில்லை.

எனக்கும் அந்த நிறுவனத் திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வெப்சைட் தகவல்களை வைத்து கொண்டு வேண்டுமென்றே வன் மத்துடன் இதுபோன்று அவதூறு தகவல்களை வெளியிட்டுள்ளார். ஆனால் நான் எப்போதும் திறந்த புத்தகமாகவே உள்ளேன்.

என் மீது சேற்றைவாரி இறைத் துள்ளவர். பெரிய அரசியல் பிரமு கர் இல்லை என்றாலும் அவர் சார்ந்த பாஜக கட்சி தேசிய கட்சி என்பதால், அவர் கூறியதற்கு நான் மக்கள் முன்பாக விளக்கமளித் துள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment