கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பாக செயலாற்றியதற்காக முதன் முதலாக இந்த மாதத்திற்கான நட்சத்திர விருது வழங்கப்பட்டது. கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் காவலர் சுப்புராஜா, தஞ்சாவூர் போக்சோ நீதிமன்றத்தில் திறமையாகச் செயல்பட்டு குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் தண்டனை பெற்றுக் கொடுத்தும், பாதிக்கப் பட்டோருக்கு ரூ. 2 லட்சம் அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளும் வகையிலும் திறமையாகச் செயல் பட்டார். இவரை சிறப்பிக்கும் வகையில் இந்த மாதத்திற்கான நட்சத்திர விருதை, காவல்துறை கண்காணிப்பாளர் பி.மகேஷ் குமார் வழங்கினர். கும்பகோணம் உட்கோட்ட காவல் துறையில் முதன்முதலாக விருது பெற்ற இவருக்கு, சக காவலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இதேபோல் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களையும், தலைமறைவாக இருந்த வர்களையும் கைது செய்த காவலர்களுக்கு ரொக்கப் பரிசும், நினைவுப் பரிசுகளும் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர்கள் சி.நாகலெட்சுமி, ஆர்.சரவணகுமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment