அரசமைப்பின் அடிப்படைக் கோட்பாட்டை அசைத்துப் பார்த்தால் பெரும் பூகம்பம் வெடிக்கும்- என்று மேனாள் உயர் நீதிமன்ற நீதிபதி பாலி நாரிமன் கூறினார்.
தற்போது கொலீஜியம் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணக்கம் காட்டமல் முரண்டு பிடிக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கை குறித்து மேனாள் நீதிபதி பாலி நரிமன் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்திய அரசமைப்பின் அடிப்படை நீதிமன்றம் நாடாளுமன்றம் இரண் டுக்குமே சமமான உரிமைகளைக் கொடுத்துள்ளது. மேலும் இந்த அடிப்படைக் கட்டமைப்பு நீதி மன்றத்தின் மீதான நம்பிக்கையை மேலும் உறுதியாக்குகிறது.
இந்த அடிப்படைக் கட்டமைப்பை அசைத்துப் பார்க்க முயன்றால் பெரும் பூகம்பம் வெடிக்கும் அரசமைப்பின் அடிப்படை அம்சங்களை மாற்றும் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் “அடிப்படை கட்டமைப்பு” கோட்பாட்டின் 50ஆவது ஆண்டில், மூத்த வழக்குரைஞர் ஃபாலி நாரிமன், இப்போது அரசமைப்பில் “உறுதிப்படுத்தப்பட்ட” அடிப்படை கட்டமைப்பு கோட்பாடு இங்கு நிலைத்திருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
94 வயதான ஃபாலி நாரிமன், 99ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக வாதிட்டார், இது நீதிபதிகள் நியமனத்தில் நிர்வாகத்தின் தலை யீட்டை அனுமதிக்கும் சட்டமாகும். உச்சநீதிமன்றம் 4-1 என்ற தீர்ப்பில், அரசமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பான நீதித்துறையின் சுதந்திரத்தை மாற்றியமைக்கிறது என்ற அடிப்படையில் இந்த திருத்தம் அரசமைப்பிற்கு சட்டத்திற்கு எதிரானது என்று தீர்ப்பளித்தது. பாலி நாரிமன் 1993 இரண்டாவது நீதிபதிகள் வழக்கு மற்றும் 1998 மூன்றாவது நீதிபதிகள் வழக்குகளிலும் வாதிட்டார், அதில் நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான தற்போதைய கொலிஜியம் முறையை ஏற்றுக்கொள்ள உச்ச நீதிமன்றத்தை வற்புறுத்தினார்.
மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டாலும், அடிப்படை கட்டமைப்பு கோட்பாட்டை உச்ச நீதி மன்றம் பாதுகாக்கும் என்று ஃபாலி நாரிமன் கூறினார்.
அடிப்படைக் கட்டமைப்பு கோட்பாடு அய்ந்து தசாப்தங்களாக நிலைத்திருப்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா?
இல்லை, இல்லவே இல்லை. மாறாக, அது இல்லாவிட்டால், இன்று நம்மிடம் ஒரு அரசமைப்பு இருக்கும், ஆனால் அதை நீங்கள் ஜனநாயக அரசமைப்பாக அங்கீகரிக்க முடியாது. இது நமது முகவுரையில் இருக்க வேண்டிய அரசமைப்பை நிலைநிறுத்துவதற்கு, அதாவது அடிப்படை, கட்டமைப்பு மற்றும் கோட்பாடு ஆகிய மூன்று வார்த்தைகளுடன் அரசமைப்பைக் காப்பாற்றும் சூத்திரமாக இருந்து வருகிறது.
இந்த கோட்பாடு நாடாளுமன்றத்தின் மேலாதிக் கத்தை மீறுவதாக ஒரு கருத்து உள்ளது. அதை எப்படி பார்க்கிறீர்கள்?
நாடாளுமன்றத்தின் மேலாதிக்கம் மிகவும் முக்கியமானது. ஆனால், கட்சி அமைப்பில், ஒரு கட்சி நாடாளுமன்றம் ஜனநாயகமானது அல்ல. எனவே, பெரும்பான்மை - ஒரு சூப்பர் மெஜாரிட்டி கட்சியும் ஜனநாயகம் அல்ல. அதுவே அடிப்படைக் கட்டமைப்புக் கோட்பாட்டைத் தேவைப்படுத்தியது.
ஆனால் அடிப்படை கட்டமைப்பு கோட்பாடு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றால்...
எந்த வித்தியாசமும் இல்லை. அவர்களும் அதே முடிவுக்கு வருவார்கள். என் கருத்துப்படி, நியாயமான எவரும் அதே முடிவுக்கு வருவார்கள். மற்றும் நான் அதை நம்புகிறேன். நீதிபதிகள் மீது எனக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது. அவர்கள் எப்படி நியமிக்கப்படு கிறார்கள், எதற்காக நியமிக்கப்படுகிறார்கள் என்பது முக்கியமல்ல. அவர்கள் சில நேரங்களில் சரியாகவும், சில சமயங்களில் தவறாகவும் முடிவு செய்யலாம். ஆனால் அநீதியைப் பார்ப்பது உங்களுக்குப் பிடிக்காததால் இது மனித சுபாவத்தின் விஷயம். அநீதி என்று நீங்கள் நினைப்பது உங்களை ஈர்க்காது. இது அனைத்து மக்களிடையேயும் மிக அடிப் படையான சிந்தனை. எனவே, நீதிபதிகள் மத்தியிலும் நீங்கள் (அதை) காண்பீர்கள்... அந்த நூலை நீங்கள் காண்பீர்கள். அதனால்தான் ‘நீதி’ என்பது முன்னு ரையில் முதல் வார்த்தையாக உள்ளது. நினைவில் கொள்ளுங்கள், இது மிகவும் மேலோட்டமான விசயம் மற்றும் அது நமது முழு அரசமைப்பையும் நிர்வகிக்கிறது. எனவே நீங்கள் சில அநீதிகளைக் கண்டால், நீங்கள் எவ்வாறு தலையிடலாம் என்பதைப் பார்க்க முயற்சிக்க வேண்டும். சட்டம் போன்றவை இரண்டாம் இடத்தைப் பெறுகின்றன. அது சட்டப்படி இருக்கலாம், ஆனால் அது நியாயமா? மேலும் அங்குதான் அரசமைப்புச் சட்டம் வருகிறது.
குடியுரிமைச் சட்டம் அல்லது சட்டப்பிரிவு
370-க்கான திருத்தம் உள்ளிட்ட அடிப்படைக் கட்ட மைப்புக் கோட்பாட்டிற்கு எதிராகச் சோதிக்கப்பட வேண்டிய பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தற்போது உள்ளன.
நான் சொன்னது போல், அவை அனைத்தும் அரசாங்கத்திற்கு ஆதரவாக நடத்தப்படும், திருத்தப்படும் திறன் கொண்டவை. ஆனால் அவை மாற்றப்படும் என்று நான் நினைக்கவில்லை, குறைந்த பட்சம் சில காலமாவது, அடிப்படை கட்டமைப்பு கோட்பாடு மறுபரிசீலனை செய்யப்படாது என்று நம்புகிறேன்... 15 அல்லது 17 நீதிபதிகள் இருந்தாலும் சரி... எனக்கு இன்னும் நீதித்துறையின் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. ஓரிரு தீர்ப்புகள் எனக்குப் பிடிக்காமல் இருக்கலாம், தீர்ப்புகளை நான் விமர்சிக் கலாம், ஆனால் இறுதியில், நீதிமன்றமே நமது சுதந்திரத்தின் மிகப் பெரிய மீட்பர் என்று நான் நம்புகிறேன்.
1973இல் கேசவானந்த பாரதி வழக்கில், அடிப்படை கட்டமைப்பு சோதனைக்கு வழிவகுத்த எதிர்காலம் குறித்த நீதிமன்றத்தின் கவலை என்ன?
இது நமது தீர்ப்பின் மூலம் அல்ல, ஆனால் ஜெர்மனியின் அரசமைப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. அவர்கள் இந்த கொள்கையை நிலைநிறுத்துவதை நீங்கள் காண் பீர்கள், ஏனென்றால் அவர்களிடம் சில அடிப்படை சட்டங்கள் உள்ளன, அவர்கள் அவற்றை அவ்வாறு அழைக்கின்றனர்.
உங்களால் மாற்ற முடியாத ஒன்றை, உங்களால் மாற்றவே முடியாது. அவ்வாறு செய்ய, நீங்கள் புதிய அரசமைப்பு சபையை அழைக்க வேண்டும், அது நம் நாட்டில் சாத்தியமற்றது. ஏனென்றால், உலகின் மிகப்பெரிய மக்கள்தொகையாக நம்மில் பலர் இருக் கும் நிலையில், இன்று ஒவ்வொரு இந்தியனுக்கும், ஒவ்வொரு விடயத்திலும் இரண்டு கருத்துகள் உள்ளன. யாரோ ஒரு சிலரால் உருவாக்கப்பட்ட மற்றும் எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட எந்த வொரு புதிய அரசமைப்பையும் இன்றைய நிலையில், கண்டுபிடிக்க முடியாது. எனவே, நமது அரசமைப்புச் சட்டமே நம்மை மிகவும் வெளிப்படையான ஒன்றாக வைத்திருக்கின்றது.
இந்த 50 ஆண்டுகளில், அடிப்படைக் கட்டமைப்பின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருக்க வேண்டிய, ஆனால் ரத்து செய்யாத சட்டம் ஏதேனும் உள்ளதா?
இருக்கக்கூடும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இருக்கும். ஆனால் சில நேரங்களில் பிடிவாதமான நீதிபதிகள் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள் உங்களைப் பிடித்துக் கொள்வார்கள், அவர்கள் உங்களை விடமாட்டார்கள்.
அடிப்படையில், நீதிமன்றம் அவர்களைப் பற்றி கவலைப்படும் போது, நாம் தான் அரசமைப்பின் இறுதி மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் நீங்கள் நீதித்துறை மறுஆய்வு செய்ய எதையும் எதிர்த்தால், நாம் அதற்கு எதிராக நிற்போம். அது அப்படியே இருந்தால், அடிப்படை கட்டமைப்பும் அப்படியே இருக்கும் என்று சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.
உதாரணமாக, நீதிபதி ஒய்.வி சந்திரசூட், கேசவானந்தா வழக்கில் சிறுபான்மை தீர்ப்பாக இருந்த பிறகு தேர்தல் வழக்கில் அடிப்படை கட்டமைப்பு கோட்பாட்டைப் பயன்படுத்தினார், அவர் அதை நம்பியதால் அல்ல, மாறாக அவர் நீதித்துறை முன்மாதிரியைப் பின்பற்ற விரும்பியதால். நான் எப்போதும் அதை பாராட்டி வந்துள்ளேன். அதுதான் சரியான காரியம்.... உண்மையில் அது எல்லா நேரத்திலும் உறுதிப் படுத்தியது. நீங்கள் 39 ஆவது திருத்தத்தைப் பார்த்தால், அது எவ்வளவு கொடூரமானது... அது பயங்கரமானது. (கேசவானந்தா தீர்ப்பில் சிறுபான்மை தீர்ப்பாக இருந்த ஆறு நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி சந்திரசூட், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அடிப்படை கட்டமைப்பு கோட்பாட்டைப் பயன்படுத்தினார் மற்றும் 39 ஆவது திருத்தத்தை ரத்து செய்த இந்திரா காந்தி எதிர் ராஜ் நரேன் (1975) வழக்கில் பெரும்பான்மை பெஞ்சில் ஒரு பகுதியாக இருந்தார். அவசர கால நிலையின் போது நிறைவேற்றப்பட்ட, 39ஆவது சட்டத்திருத்தம், குடியரசுத் தலைவர், பிரதமர், துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் மக்களவைத் தலைவர் தேர்தல் தொடர்பான சவாலை உச்சநீதிமன்றம் விசாரிக்க தடை விதித்தது.)
உங்கள் கருத்துப்படி அரசமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு என்பது என்ன?
தற்போதைக்கு, அடிப்படைக் கட்டமைப்பு என்பதை நீதிபதிகள்... அரசமைப்பின் அடித்தளமாக கருதுகின்றனர்... நிச்சயமாக, நாடாளுமன்றம் உச்சமானது, எந்த சந்தேகமும் இல்லை. நீதிமன்றமும் அப்படித்தான். ஆனால் அரசமைப்புச் சட்டம்தான் உச்சமானது. எந்தவொரு தனி நபர் குழுவும் அல்ல. இது உயர்ந்த பீடத்தில் வைக்கப்படும் மிக உயர்ந்த ஆவணம். நாடாளுமன்றத்தில் அனைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மற்றும் நீதிபதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாததால், நாடாளுமன்றம் உச்சமானது என்று பெரும்பாலான மக்கள் தவறாக புரிந்துக் கொள்ளும் மிக முக்கியமான விடயம் இதுதான். எப்போதும் வைக்கப்படும் வழக்கமான வாதம். அதில் எந்த அர்த்தமும் இல்லை. உச்சமானது நீதிபதியோ, உச்ச நீதிமன்றமோ, நாடாளுமன்றமோ அல்ல. மிக உயர்ந்தது அரசமைப்பு, எனவே, நீங்கள் அதை விளக்க விரும்புவது போல் உள்ளது. நல்வாய்ப்பாக அனைத்து விவேகமுள்ள நீதிபதிகளும்ஞ் அதாவது கடவுள் விரும்பினால் நல்லறிவு பெற்றவர்கள் அனைவரும் 65 வயதில் ஓய்வு பெறுகிறார்கள்! அதனால்தான் அவர்கள் 65 வயதில் ஓய்வு பெறுகிறார்கள். எனவே, பொதுவாக... அரசமைப்பிற்கு எந்த ஆபத்தும் இல்லை என்று நான் பார்க்கிறேன்.
முன்னோக்கிச் செல்லும்போது, அரசமைப்பின் என்ன அடிப்படை அம்சங்கள் சோதிக்கப்படுவதை நீங்கள் காண்கிறீர்கள்?
முதலாவது நாடாளுமன்ற ஜனநாயகம். நீங்கள் அதை ஒரு மதமாக... ஹிந்து மத அரசாக மாற்ற விரும்புகிறீர்கள் என்று வைத்துக் கொண்டால். முடியாது என்பதே பதில். இவை வெளிப்படையான விடயங்கள் ஆனால் யாரும் அதை மாற்ற விரும்பவில்லை. அவர்கள் அதை சிக்கனமாக பயன்படுத்தியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இல்லை, அரசமைப்பை மாற்றுவதற்கு நாடாளு மன்றத்திற்கு உரிமை உண்டு. நீங்கள் அடிப்படை உரிமைகளை கூட மாற்றலாம், அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் நீங்கள் அதை எப்படி செய்கிறீர்கள், எப்போது செய்கிறீர்கள், ஏன் செய்கிறீர்கள், இவை அனைத்தும் பொருத்தமானதாகிறது.
அடிப்படை கட்டமைப்பு கோட்பாடு தெளிவற்றது மற்றும் நீதிபதிகளின் விளக்கத்திற்கு உட்பட்டது என்ற விமர்சனத்தை குடியரசுத் துணைத் தலைவர்கூட கூறியிருக்கிறார்.
அவர்கள் எதை அறிமுகப்படுத்த விரும்புகிறாரோ அதை அறிமுகப்படுத்தட்டும். நடுங்கும் கால்களா அல்லது உறுதியான கால்களா என்று பார்ப்போம். அங்குதான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரும். அந்தக் கோட்பாட்டை நீர்த்துப் போக அனுமதிக்க மாட்டார்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. கொடுக்கப்பட்ட வழக்கில், இரண்டு அல்லது மூன்று நீதிபதிகள் வேறுபடும் 103ஆவது அரசமைப்புத் திருத்தத்தை (ணிகீஷி இடஒதுக்கீடு) அவர்கள் நிலைநிறுத்தியது போல, அரசமைப்புத் திருத்தத்தை அவர்கள் ஆதரிக்கலாம். நீங்கள் அதை விமர்சிக்கலாம் ஆனால் யாரும் அடித்தளத்தை அசைக்கக்கூடாது. பின்னர் அது நிலநடுக்கமாக மாறும்.
ஆனால் நாடாளுமன்றமே அடிப்படை கட்ட மைப்பு கோட்பாட்டை அங்கீகரித்துள்ளது. நாடாளு மன்றம் புத்திசாலித்தனமாக ஒரு திருத்தத்தை முன்மொழிந்து அதை நிறைவேற்றியுள்ளது... நீங்கள் அவசரநிலையில் கூட இடைநீக்கம் செய்ய முடியாது... விதி 20 மற்றும் 21. வெளிப்படையாக. மேலும் விதி 21, மிக முக்கியமானது, சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறையின்படி உயிரையும் சுதந்திரத்தையும் பறிக்க முடியாது, இப்போது இது நடைமுறை மட்டுமல்ல, உண்மையான சட்டமும் கூட.
நன்றி: 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' - 27.4.2023
தமிழாக்கம்: சரவணா இராஜேந்திரன்
No comments:
Post a Comment