சென்னை,மே11- ம.தி.மு.க. பொதுச் செயலாளர் மாநிலங்களவை உறுப் பினர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் சி.ஆர்.பி.எஃப் (Central Reserve Police Force- CRPF) துணை ஆய்வாளர் (CRPF) மற்றும் தலைமைக் காவலர் (Head Constable) பணியிடங்களைத் தேர்வு செய்ய மே எட்டாம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டி ருக்கிறது. அதில் ஜூலை மாதம் இணைய வழி எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று கூறப்பட் டுள்ளது.
ஆனால் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டும் தான் தேர்வு நடக்கும் என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது.
சி.ஆர்.பி.எஃப் எனப்படும் துணை இராணுவப் படையில் ஆட்களை சேர்க்க நடைபெறும் எழுத்துத் தேர்வு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் மட்டும்தான் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு இருப்பது கண்ட னத்துக்கு உரியது.
அனைத்து மாநிலங்களிலி ருந்தும் துணை இராணுவப் படையில் வீரர் கள் சேரும் வகையில், தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் எழுத்துத் தேர்வை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.
-இவ்வாறு வைகோ குறிப்பிட் டுள்ளார்.
No comments:
Post a Comment