குழந்தைத் திருமணத்துக்கு ஆளுநர் வக்காலத்தா? தீட்சிதர்களுக்கு தனி சட்டமா? அமைச்சர் பி.கே.சேகர்பாபு காட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 7, 2023

குழந்தைத் திருமணத்துக்கு ஆளுநர் வக்காலத்தா? தீட்சிதர்களுக்கு தனி சட்டமா? அமைச்சர் பி.கே.சேகர்பாபு காட்டம்

சென்னை,மே7- சிதம்பரம் குழந்தை திருமணம் விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஏட்டிற்கு அளித்த பேட்டியில் சிறுமிகளுக்கு கன்னித் தன்மை சோதனை நடை பெற்றது என்றும், அவர் கள் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறினார்.

இது தொடர்பாக தலைமைச் செயலாளர் விளக்கம் அளிக்க தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தாக்கீது வழங்கியது. ஆனால் அப்படியான சோதனை நடைபெறவில்லை என்றும், சிறுமிகள் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுவது பொய் என் றும் தமிழ்நாடு மாநில காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு அறிக்கை வாயிலாக தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு கூறுகையில்,

“இது சட்டத்தின் ஆட்சி; தவறு எங்கு நடந்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தை திருமண தடுப்பு சட்டம் 1930ஆம் ஆண்டே இயற்றப்பட்ட சட்டம். 

பெறப்பட்ட 4 புகார்க ளில் வழக்குப்பதிவு செய் யப்பட்டு அதன் அடிப் படையில் சட்டப்படி விசாரிக்கப்பட்டதே தவிர இரட்டை விரல் பரிசோதனை நடந்ததாக எந்த குறிப்பிலும் இல்லை.

இந்த பரிசோதனை யில் கூட பெண் மருத்து வர்களே ஈடுபட்டதாக காவல்துறை தலைமை இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.

ஆளுநரை கேட்பது ஒன்றே ஒன்றுதான்; சட்ட மீறல், விதிமீறல் நடந்தால் - சிதம்பரம் தீட்சிதர்கள் என்றால் சட்டம் அவர்கள் மீது பாயக்கூடாதா? 

சிதம்பரம் தீட்சிதர் களுக்காக ஆளுநர் தனி யாக வகுத்துத் தந்துள் ளாரா? சட்டம் அனைவ ருக்கும் பொதுவானது. சிதம்பரம் கோயிலை பொறுத்தளவில் புகார் களின் மீது பெறப்பட்ட ஆதாரங்களின் அடிப் படையில் மட்டுமே நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் மக்களால் தேர்வு செய் யப்பட்ட பிரதிநிதிகள் ஆளும் ஆட்சி நடக் கின்றது. ஒட்டுமொத்த ஒன்றியத்திற்கே ஆளுநர் தேவையில்லை என்பதுதான் திமுகவின் கொள்கை.

ஆளுநரின் குற்றச்சாட்டுக்களுக்கு அரசின் சார்பில் அமைச் சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித் துள்ளார். எங்களுக்கு பணிகள் அதிகம் உள்ளன.

காலாவதி ஆகப் போவது ஆளுநர்தானே தவிர 'திராவிட மாடல்' அல்ல. 'திராவிட மாடல்' ஆட்சியை கருநாடக தேர்தல் களத்தில் கூட பாஜகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவிற்கே வழிகாட்டியாக 'திரா விட மாடல்' ஆட்சி உள் ளது. அவர் எந்த இயக் கத்தை முன்னிலைப் படுத்த நினைக்கிறாரோ அந்த இயக்கமே தமிழ் நாட்டில் காலாவதி ஆகி விடும்” என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment