குரு - சீடன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 28, 2023

குரு - சீடன்

இப்படியா...?

சீடன்: தெலுங்கு ரசிகர்கள் மனதில் கடவுளாக வாழும் என்.டி.ராமராவ் என்று ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டு இருக்கிறதே,  குருஜி?

குரு: ஒரு நல்ல மனிதரை இப்படியா அவமதிக்க வேண்டும், சீடா!

...........

எந்த வஸ்து? எந்த வாஸ்து?

சீடன்: கடிகாரத்தை எந்தெந்த இடத்தில் வைத்தால் நல்லது என்று வாஸ்து சாஸ்திரம் கூறுவதாக ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டு இருக்கிறதே,  குருஜி?

குரு: அந்தக் கடிகாரத்தைக் கண்டுபிடித்தது எந்த வஸ்து? எந்த வாஸ்து சீடா?


No comments:

Post a Comment