பெரியார் சிலையை மூடுவதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 2, 2023

பெரியார் சிலையை மூடுவதா?

 நான் கடந்த சில ஆண்டுகளாக நெல்லை சந்திப்பில் உள்ள அறிஞர் அண்ணா சிலையையும், பாளையில் உள்ள தந்தை பெரியார் சிலையையும்  வண்ணம் தீட்டி பராமரித்து வருகிறேன் என்பதை தங்கள் மேலான பார்வைக்கு தெரிவித்துக் கொள்கிறேன். சில ஆதிக்க சக்திகளின் பிடியில் சிக்கித் தவித்த விளிம்பு நிலை மக்களை மானமும், அறிவும் பெற செய்திட்ட தந்தை பெரியாரின் சிலைகளுக்கு கடந்த அடிமை அதிமுக ஆட்சியில்  தமிழ்நாடெங்கும் கூண்டு அமைத்தது தாங்கள் அறிந்ததே - இது என் போன்ற எண்ணில் அடங்கா பகுத்தறிவுவாதிகளுக்கும் பெரியார் பற்றாளர்களுக்கும் நெஞ்சில் பாய்ந்த வேலாக வேதனையைத் தந்தது. 

இந்த நிலையில் கடந்த மே மாதம் 2021இல் தமிழ்நாடு மக்களின் பேராதரவோடு மாண்புமிகு தளபதியார் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டின் பல பகுதிகளில் உள்ள பெரியார் சிலைகளுக்கு அமைக்கப்பட்ட கூண்டுகள் அகற்றப்பட்டு விட்டன. எனவே, அதே வழிமுறையைப் பின்பற்றி பாளை பேருந்து நிலையம் அருகில் உள்ள பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிலையைச் சுற்றி உள்ள கூண்டை அகற்றிட உத்தரவிடுமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம்.

என்றும் பகுத்தறிவு பணியில்

ஆ.சஞ்சய்குமார், திருநெல்வேலி

No comments:

Post a Comment