அந்துமணி - சிண்டுமணியின் அலறல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 18, 2023

அந்துமணி - சிண்டுமணியின் அலறல்!

கேள்வி: இந்த ஆண்டும் தி.மு.க. அரசால் 'நீட்' தேர்வை ரத்து செய்ய முடியவில்லையே... 

பதில்: அவர்களால் இனி ஓராண்டும் ரத்து செய்ய முடியாது; ரத்து என்பது அவர்களது தேர்தல் வாக்குறுதி என்பதே உண்மை.

- அந்துமணி பதில்கள் ('தினமலர்'), 14.5.2023

பார்ப்பனர்களின் ஆசையை வெளிப்படுத்துவதுதானே  'தினமலர்க்' கூட்டத்தின் அபார ஆசை.

'நீட்'டால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? பயன் பெற்றவர்கள் யார்?

'நீட்' - சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில்தானே தேர்வு நடத்தப்படுகிறது?

இந்தியாவில் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டம் மட்டும்தான் இருக்கிறதா?

2016 இல் 'நீட்' இல்லை. அப்பொழுது சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் கிடைத்த இடங்கள் 62.

2017 இல் 'நீட்' வந்தது; சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்குக் கிடைத்த இடங்கள் 1220.

அதாவது 20 மடங்கு அதிகம் - கொள்ளை!

'நீட்' பார்ப்பனர் வயிற்றில்தானே அறுத்துக் கட்டப்பட்டுள்ளது!

இப்பொழுது புரிகிறதா 'தினமலர்'  திரிநூல் 'நீட்'டை விழுந்து விழுந்து ஆதரிப்பதன் நோக்கம்.

தி.மு.க.வைப் பொருத்தவரை 'நீட்' ஒழிப்பில் தன் கடமையைச் செய்தே வந்திருக்கிறது. இரண்டு முறை சட்டப்பேரவையில் 'நீட்'டுக்கு எதிராக மசோதா நிறைவேற்றியதே -  முட்டுக்கட்டை எங்கே? ஆளுநர் அலுவலகத்திலும், குடியரசுத் தலைவர் அலுவலகத்திலும்தானே முடங்கிக் கிடக்கிறது.

உண்மை இவ்வாறு இருக்க, 'தினமலர்' அந்துமணி தி.மு.க.மீது குற்றப் பத்திரிகையைப் படிக்கிறதே - 

இதற்குப் பெயர்தான் சிண்டுமணி - அந்துமணி என்பது!


No comments:

Post a Comment