பொள்ளாச்சி, மே 24 - 21.05.2023 ஞாயிறு அன்று மாலை 6 மணியளவில் பொள்ளாச்சி கழக மாவட்ட கலந் துரையாடல் கூட்டம், ம.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது.
பொள்ளாச்சி கழக மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் (இரண் டாவது கூட்டம்) திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் அவர்கள் தலைமை யில் பொள்ளாச்சி மறுமலர்ச்சி தி.மு.க. அலுவலகக் கட்டடத்தில் மாநில திராவிடர் கழக இளைஞ ரணி அமைப்பாளர் ஆ.பிரபாகரன் மற்றும் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வே.இராஜ வேல் ஆகியவர்கள் முன்னிலை வகித்தனர். மேலும் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஆ.முனீஸ்வரன் முன்னிலை வகித்தார்.
நகர அமைப்பாளர் க.வீரமலை, மாவட்ட துணை செயலாளர் கி.சிவராஜ், நகர தலைவர் சு.வடிவேல், மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்தி, மாவட்ட இளை ஞரணி செயலாளர் பிரவின்குமார், மாவட்ட மாணவர் கழக தலைவர் வின்சென்ட், சட்ட கல்லூரி மாணவி திவ்யவாசினி, பொதுக் குழு உறுப்பினர் தாராபுரம் சக்தி வேல், மாவட்ட செயலாளர் ரவிச் சந்திரன், மாவட்ட தலைவர் சி.மாரிமுத்து, காப்பாளர் தி.பரம சிவம் ஆகியோர் கலந்துகொண்டு கருத்து கூறி உரையாற்றினர்.
கலந்துகொண்டவர்கள்:
வே.ராஜவேல், தி.பரமசிவம், அ.ரவிச்சந்திரன், ஆர்.திவ்யவாசுகி, ர.வின்சென்ட், ம.பிரவீன்குமார், வி.வருண், கு.கார்த்தி, க.வீரமலை, சி.சிவராஜ், நா.சக்திவேல், சு.வடி வேல், ஆ.முனீஸ்வரன், சி.மாரி முத்து, ஆ.பிரபாகரன்
தீர்மானம் 1: கோவை மண்டல செயலாளர் ச.சிற்றரசு பகுத்தறிவா ளர் கழக தோழர் ச.சித்திரவேல் ஆகியோர் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலைக் தெரிவித்துக் கொள்கின்றது.
தீர்மானம் 2: மே-13 அன்று ஈரோட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. திராவிடர் கழக பொதுக்குழுவில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களை ஏற்று செயல்படுமுத்துவது என முடிவு செயல்படுகின்றது.
தீர்மானம் 3: பொள்ளாச்சி மாவட்டத்தில் ஒரு நாள் பெரியா ரியல் பயிற்சிப் பட்டறை நடத்து வது எனவும் புதிய மாணவர்கள், இளைஞர்களை பெருமளவில் பங் கேற்கச் செய்வது என தீர்மானிக் கப்படுகின்றது.
தீர்மானம் 4: மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய, நகரம், கிராமங்களில் புதிய உறுப்பினர் களைச் சேர்த்து புதிய கிளைக் கழ கங்கள் உருவாக்குவது என தீர் மானிக்கப்படுகின்றது.
தீர்மானம் 5: தோழர்கள் தங் களது இல்லங்களில் கழக கொடியினை ஏற்றுவது என முடிவு செய் யப்படுகின்றது.
No comments:
Post a Comment