சாமியார்களின் மோசடிகளைப் பாரீர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 18, 2023

சாமியார்களின் மோசடிகளைப் பாரீர்!

பெண் சாமியார் என்று வேடங்கட்டி பணத்தைக் குவித்தவர்களுக்கிடையே மோதல்!

பக்தியும் - பணமும் கூட்டு பல்லிளிக்கிறது!

கரூர், மே 18 சாமியார் என்று ஒரு பெண்ணை ஏற்பாடு செய்து - மக்களிடம் பிரச்சாரம் செய்து, பணம் குவித்த பண முதலைகளுக்கும் - சாமியாரிணிக்கும் மோதல் வெடித்து வெளிச்சத்திற்கு வந்தது.

கரூர் அருகே தொழில் துவங்க இடம் வாங்கிய தொழிலதிபர் ஒருவர் தொழில் தொடங்குவதற்குப் பதிலாக அங்கு ‘செட் அப்' செய்த பெண்ணை குறி சொல்லும் சாமியாராக மாற்றி, பல லட்ச ரூபாய் பணம் பார்த்துள்ளனர். கரோனாவிற்குப் பிறகு குறி சொல்ல ஆட்கள் வருவது குறைந்ததும், இவர்கள் ‘செட் அப்' செய்த பெண் சாமியாரை விரட்டிவிட்டு, புதிய தொழில் தொடங்க முயன்றனர். இந்நிலையில் அந்தப் பெண், தான் இடத்தை விட்டு காலி செய்ய மறுத்து, ‘சாமி'க்கு எழுதிக் கொடுத்ததைக் கேட்க உரிமையில்லை என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

கரூர் அருகே சில ஏக்கர் காலி நிலத்தை தொழிலதிபர் ஒருவர் வாங்கி உள்ளார். அவர் தனது நண்பர்களோடு சேர்ந்து தொழில் செய்ய நினைத்தார். ஆனால், அதற்குப் போதுமான நிதி கிடைக்காத காரணத்தால் என்ன செய்ய லாம் என்று நினைத்தபோது, ‘‘சாமியார் தொழில் செய் தால் நல்ல வருவாய் பார்க்கலாம்'' என்று கூறி பெண் ஒருவரை சாமியாராக மாற்றி அங்கு அழைத்து வந்தனர். அந்த இடத்தைச் சுற்றி சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டது. 

பின்னர் குதிரை சிலை, கருப்புசாமி சிலை ஆகிய வற்றை அங்கு நிறுவி வெள்ளிக் கிழமைகளில் கிடா வெட்டி பூஜை செய்தனர். இதில் பங்கேற்க சுற்று வட்டார பொது மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதை யடுத்து ஏராளமான ஆண்களும், பெண்களும் பூஜைக் குச் சென்றனர். இவர்கள் கொண்டுவந்த பெண் சாமி யாரை பற்றிய விவரங்கள் எதுவும் கிராம மக்களுக்குத் தெரியவில்லை. இருப் பினும் மது மற்றும் கறிவிருந்து காரணமாக மக்கள் அங்கு அதிகம் வரத்தொடங்கினர். அடுத்த வாரம்  பெண் சாமியாரிணிக்கு கோர மாக ‘மேக் அப்' போட்டு, அவர் ஆணி செருப்பை அணிந்து கொண்டு, ஒரு கையில் பெரிய அரிவாளும், மற்றொரு கையில் சுருட்டும் வைத்துக் கொண்டு ஆவேசமாக நின்று அருள்பாலிப்பதைப் போல் நடித்து பொது மக்களைப் பார்த்து நாக்கைத் துருத்தி துருத்தி, ‘‘ஆத்தா கிட்ட வாங்கடா உங்களுக்கு இலவசமாக அருள்வாக்கு சொல்கிறேன்'' என்றார். அன்றைக்கும் ருசியாக கிடா விருந்து அங்கு வந்தவர்களுக்குக் கிடைத்தது.

இந்த விஷயம் ஊருக்குள் பரவத் தொடங் கியதும், உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து கூட்டம் குவி யத் தொடங்கிவிட்டது.சாமியாரைப் பார்க்க வருபவர் கள், வெளிநாட்டு மதுபானத்துடன் வரவேண்டும் என்று பலர் மதுபானங்களை வாங்கிக் கொண்டுவந்து கொடுத்து வந்தனர். அந்த இடத்தின் உரிமையாளர்களான தொழிலதிபர்களும், தங்கள் பங்கிற்கு ஆட்களை வைத்து சாமியாரின் புகழை கரூர், நாமக்கல் உள்ளிட்ட பல ஊர்களில் பேச வைத்தனர். இதனால் கூட்டம் அதிகரித்துப் பணம் அதிகம் வரத் தொடங்கியது. இதையடுத்து நிலத்தை வாங்கிய தொழிலதி பர்கள் அந்த பெண் சாமியாருக்கு ஜீப் ஒன்றையும் வாங்கிக் கொடுத் துள்ளனர்.  வசூல் ஆகும் தொகையில் ஒரு பங்கை மட்டும் சாமி யாருக்குக் கொடுத்துவிட்டு, மீதித் தொகையை அவர்கள் எடுத்துக்கொண்டதாக கூறப்படு கிறது. இவ்வாறு 4, 5 ஆண்டுகள் பெண் சாமியாரும், அந்த நிலத்தின் உரிமையாளர்களும் குஷியாக இருந் தனர்.

கரோனாவும் வந்தது - 

பக்தர்களும் முடங்கினர்!

இந்நிலையில் 2020 இல் கரோனா வைரஸ் தாக்கி யதும், பக்தர்கள் வருகை நின்றுவிட்டது. கரோனாவுக்குப் பின்னர் பழையபடி பக்தர்கள் வருவார்கள் என தொழிலதிபர்கள் எதிர்பார்த் தனர். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. வெள்ளிக்கிழமைகளில் அய்ந்தாறு பேர் மட்டுமே வருகை தருகிறார்கள். அதைத் தொடர்ந்து நிலத்தை வாங்கிய கரூர் தொழிலதிபர்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பு அந்தப் பெண் சாமியா ரைத் துரத்த முயற்சி செய்ததாகவும் தகவல் வெளியானது. 

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் சாமி யார், ‘‘என்னை முதலீடா வச்சு லட்சக் கணக்கில் பணம் சம்பாதித்து விட்டு, இப்ப என்னையே காலி பண்ண சொல்றீங்களாடா? நான் நினைத்தேன் என்றால் உங்களை காலி பண்ணிடுவேன்'' என்று பேசியுள்ளார். அதைத் தொடர்ந்து சாமியார் தரப்புக்கும், நிலத்தை வாங்கிய தொழிலதிபர்களுக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால், பெண் சாமி யாருக்குப் பொதுமக்கள் பலர் ஆதரவு தெரிவித்து வருவதால்,  அவரை என்ன செய்வது என்று தெரியாமல் தொழிலதிபர்கள் விழித்து வருகின்றனர்

இது தொடர்பாக பெண் சாமியார் கூறும் போது, ‘‘நான் குறி சொன்னபோது வருமானம் கொட்டியது, அப்போது அவர்களுக்கு இனித் தது. கூட்டம் இல்லை என்றவுடன் என்னை துரத்தப் பார்க்கிறார்கள். இந்த இடத்தின் விலைக்கு மேலேயும் சம்பாதித்துக் கொடுத்து விட்டேன். ‘சாமி'க்குக் கொடுத்ததை திருப்பிக் கேட்க முடியாது; முடிந்தால் விரட்டிப் பார்க் கட்டும்'' என்று மிரட்டல் விடுத்து வருகின்றனர். 

இந்த நிலையில் அந்த இடத்தில் புதிய கோவில் ஒன்றையும் பெண் சாமியார் கட்டு வதற்கு கட்டுமானப் பொருள்களை வாங்கி குவித்து வருகிறார்.

No comments:

Post a Comment