‘வாட்ஸ்அப்' பிரபலமான மெசேஜிங் ஆப் ஆகும். உலகம் முழுவதும் பல் வேறு பயனர்களை கொண்டுள்ளது. இளை ஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ‘வாட்ஸ்அப்' செயலியைப் பயன்படுத்துகின்றனர்.
இந்தநிலையில் இதைக் குறி வைத்து பல மோசடிகள் நடக்கின்றன. சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளன. மின்கட்டண மோசடி, வேலைவாய்ப்பு மோசடி எனப் பல நடக்கின்றன. சமீபத்தில், மகாராட்டிராவைச் சேர்ந்த பெண் ஒருவர் இந்த மோசடியில் சிக்கி ரூ.15.22 லட்சத்தை இழந்துள்ளார்.
இந்தநிலையில், ‘வாட்ஸ்அப்' மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது பற்றி இங்கு பார்ப்போம். தினமும் ரூ. 20,000 வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம் என வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்புகின்றனர். முதலில் அவர்கள் வாட்ஸ் அப்பில் வேலைவாய்ப்பு குறித்து தகவல் அனுப்புகின்றனர். வீட்டி லிருந்தே வேலை செய்யலாம். தினமும் ரூ.8000- 20,000 வரை சம்பாதிக்கலாம். வேலைக்கு சேர்ந்தவுடன் ஒரு தொகை கொடுக்கப்படும் எனக் கூறி ஒரு போன் நம்பர் லிங்க்கை அந்த குறுஞ்செய்தியில் கொடுக்கின்றனர். அதன்படி, அவர்கள் தனி டெலிகிராம் கணக்கு ஆரம்பிக்க சொல்கின்றனர். அதில் அவர்கள் வேலைக்கான இலக்கை கொடுக்கின்றனர். பிறகு, அடுத்தடுத்த இலக்கைப் பெற உங்களிடமிருந்து பணம் கேட்பர். பணம் திரும்ப தரப்படும், கொடுக்கப்படும் எனக் கூறி பணம் பெறுகின்றனர். ஆனால் இது ஒரு மோசடி. உங் களது பணம் திரும்ப கொடுக்கப்படாது. பின்னர் அவர்களை தொடர்பு கொள்ள முடியாது.
இது போன்ற மோசடி குறுஞ்செய்திகளை தவிர்க்க வேண் டும். பொதுவாக நிறுவனங்கள் அவர்களுடைய அதிகாரப்பூர்வ பக்கத்திலிருந்து தான் தகவல்களை அனுப்புவார்கள். லிவீஸீளீமீபீமிஸீ ணீஸீபீ ழிணீuளீக்ஷீவீ போன்றவற்றிலிருந்து அதிகாரப்பூர்வ பக்கத்திலிருந்து தொடர்பு கொள்வார்கள். இப்படி ‘வாட்ஸ்அப்' குறுஞ்செய்தி மூலம் ஆட்சேர்ப்பு செய்ய மாட்டார்கள்.
மின்கட்டண மோசடி சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. சைபர் கிரைம் காவல்துறையினர் இதுகுறித்து முன்பே எச்ச ரிக்கை, விழிப்புணர்வு செய்துள்ளனர். எச்சரிக்கை விடுத்தும் வருகின்றனர். நீங்கள் இன்னும் மின் கட்டண பாக்கி செலுத்த வில்லை. கடந்த மாதம் மின் கட்டணம் பாக்கி உள்ளது. உடனே பணம் செலுத்தவில்லை என்றால் இன்று இரவு உங்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் எனக் கூறி அந்த குறுஞ்செய்தி-உடன் ஒரு போன் நம்பரை அனுப்புகின்றனர்.
இந்த மோசடியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் ஒருவர் கூறுகையில், மின் கட்டண பாக்கி உள்ளது. உடனே செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்தது. அதை அவர் தந்தைக்கு அனுப்பி யுள்ளார். அவர் அந்த குறுஞ்செய்தியில் கொடுக்கப்பட்ட அலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார். அவர்கள் ஒரு செயலியை தரவிறக்கம் செய்யக் கூறி அதில் பணம் செலுத்தும்படி கூறினர். அதில் ரூ.5 செலுத்தும்படி எழுதப்பட்டிருந்தது. அப்படி, ரூ.5 செலுத்தியதும் என் வங்கி கணக்கிலிருந்து ரூ.25,000 டெபிட் செய்யப்பட்டது என்று கூறினார்.
மின்சாரக் கட்டணம் தொடர்பாக அரசின் அதிகாரப்பூர்வ பக்கத்திலிருந்து மட்டுமே எஸ்எம்எஸ் வரும். அல்லது ணீutஷீனீணீtமீபீ நீணீறீறீs பெறப்படும். அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளும்படி அறிவிப்பு கொடுக்கப்படாது.
வாட்ஸ் அப்-பில் ஒரு ஒளிப்படம் அனுப்பப்படுகிறது. அதில் ரூ.25 லட்சம் வரை பணம் ஜெயிக்கலாம் எனக் கூறி வாட்ஸ் அப் எண்ணுடன் தகவல் அனுப்புகின்றனர். முதலில் சிறு தொகை கேட்கின்றனர். அதுவும் பின்னர் திருப்பித் தரப் படும் எனக் கூறுகின்றனர். ஆனால் உங்கள் பணம் திரும்ப தரப்படாது. அது ஒரு மோசடி ஆகும். இதுபோன்ற மோசடி களை தவிர்க்கவும். அந்த வாட்ஸ் அப் எண்ணை விடவும்.
‘வாட்ஸ்அப்' க்யூ ஆர் கோடு மோசடிகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ‘வாட்ஸ்அப்'-பில் உங்களுக்கு நீணீsலீ ஜீக்ஷீவீக்ஷ்மீ கிடைத்திருக்கிறது, இதைப் பெற கீழுள்ள க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யவும் எனக் குறிப்பிட்டிருக்கும். அதைப் பயன்படுத்தினால், குறிப்பிட்ட தொகை செலுத்தி பணத்தை பெறவும் எனக் கேட்கும். பணம் பின்னர் திரும்பத் தரப்படும் எனக் சொல்லும், ஆனால் உண்மையில் பணம் திரும்ப கொடுக்கப்படாது. நீங்கள் பணம் மோசடி செய்யப்படுவீர்கள்.
இந்த மோசடிகளில் சிக்காமல் இருக்க பணம் செலுத்த க்யூ ஆர் கோடுகளை தவிர்க்கலாம். அருகிலிருந்து ஸ்கேன் செய்யலாம் இணையவழியில் தெரியாத நபர்கள் அனுப்பும் க்யூ ஆர் கோடுகளை ஸ்கேன் செய்யாமல் இருப்பது நல்லது.
No comments:
Post a Comment