சாகர்,மே18- குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு பணம் கிடைக்காததால் மத்தியப் பிரதேச முதலமைச்சர் பங்கேற்ற மேடையை நோக்கி தந்தை தனது குழந்தையை வீசி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் படேல் - நேஹா இணையருக்கு ஒரு வயதில் மகன் உள்ளார். அந்த குழந் தைக்கு மூன்று மாதங்கள் ஆன போது, மருத்துவர்கள் அவரது இதயத்தில் துளை இருப்பதைக் கண்டுபிடித்தனர். அதன்பிறகு மருத் துவ சிகிச்சைக்காக ரூ.4 லட்சம் வரை செலவு செய்துள்ளார். அறுவை சிகிச்சைக்கு மேலும் ரூ.3.50 லட்சம் தேவைப்பட்டுள்ளது.
அந்தப் பணத்தை எப்படித் திரட்டுவது என்று அவர்களுக்குப் புரியவில்லை. பலரிடம் உதவி கேட் டும் பணம் கிடைக்கவில்லை. இதற் கிடையே சாகர் பகுதியில் நடை பெற்ற கூட்டத்துக்கு முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் வந்தார். அதனால் இணையர் தங்களது குழந் தையுடன் முதலமைச்சரை சந்தித்து உதவி கோரலாம் என நினைத்து, கூட்டம் நடந்த இடத்துக்கு வந்தனர். பாதுகாப்பு காரணங்களால், அவர் களால் முதலமைச்சரை நெருங்க முடியவில்லை. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான முகேஷ், திடீரென முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மேடையில் பேசிக் கொண்டிருந்த போது, தனது குழந்தையை மேடையை நோக்கி வீசி எறிந்தார்.
அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு படையினர், அந்த குழந்தையை லாவகமாக பிடித்து தாயிடம் ஒப் படைத்தனர். அப்போது முதல மைச்சர் உள்ளிட்ட பலரும் அதிர்ச்சி யடைந்தனர். அதன்பின் குழந்தை யின் உடல் பிரச்சினை குறித்து இணையரிடம் கேட்டு அறிந்து கொண்ட முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், அந்த குழந்தைக்கு மருத்துவ உதவி வழங்க மாவட்ட ஆட்சியரிடம் உத்தரவு பிறப்பித்தார். முதலமைச்சர் பங்கேற்ற கூட்டத்தில் குழந்தையை வீசி எறிந்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment