நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: பிரின்ஸ் கஜேந்திர பாபு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 24, 2023

நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: பிரின்ஸ் கஜேந்திர பாபு

சென்னை, மே 24 - அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலர் பிரின்ஸ் கஜேந்திர பாபு தெரிவித் தார்.

நீட் தேர்வு விலக்கு மசோதா நிலை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ஒன்றிய அரசிடம் ஏற்கெனவே அளிக்கப்பட்ட மனு தொடர்பாக சென்னை எழும்பூரில்  அவர் நேற்று (23.5.2023) செய்தியாளர் களிடம் கூறியதாவது:

நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஒன்றிய அரசிடம் இருந்து கோரி பெற்று ஒப்புதல் அளிக் கும்படி குடியரசுத் தலை வருக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் பொதுப் பள் ளிக்கான மாநில மேடை அமைப்பு சார்பில் கோரிக்கை மனு அனுப் பப்பட்டது.

அந்த மனு குடியரசுத் தலைவரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படா மல் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலருக்கு அனுப்பி வைக்கப்பட்ட தாகவும், தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் இயற்றிய நீட் தேர்வு விலக்கு மசோதா ஒன்றிய உள்துறை அமைச்சகத் தின் பரிசீலனையில் உள் ளதாகவும் தகவல் அறி யும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

மாநில சட்டப் பேரவை இயற்றிய மசோதாவை ஒன்றிய அரசு முடக்கி வைத்திருப்பது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது. அனைத்து விதமான நுழைவுத் தேர் வுகளையும் தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும்.

தேசிய அளவில் அனைத்துக் கட்சிகளை யும் நீட் தேர்வுக்கு எதி ராக தமிழ்நாடு அரசு ஒன்று சேர்க்க வேண்டும் என்றார் அவர்.

இந்த சந்திப்பின் போது, தமிழ்நாடு நல் வாழ்வு இயக்கத் தலைவர் சீ.ச.ரெக்ஸ் சற்குணம், தமிழ்நாடு மாணவர்-பெற்றோர் நலச் சங்கத் தலைவர் செ.அருமைநா தன், பொதுப் பள்ளிக் கான மாநில மேடை செயலர் வே.மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

No comments:

Post a Comment