விடுதலை சிறுத்தைகள் அமைப்பில் புதிய அணுகுமுறை: 25 சதவீத இளைஞர்கள் - புதிய மாவட்ட செயலாளர்கள் - பட்டியல் இனம் சாராதவர்கள், பெண்களுக்கு பத்து சதவீத வாய்ப்பு
சென்னை, மே 8 - வி.சி.க. மாவட்டச் செயலாளர் பொறுப்பில் 25% இளைஞர்கள், தலா 10% பெண்கள், பட்டிய லினத்தைச் சாராதவர்களை இடம் பெறச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது முக நூல் பக்கத்தில் வெளியிட்ட காணொலி யில் கூறியிருப்பதாவது:
இந்திய அரசியல் வரலாற்றில் புதிய முயற்சியை நாம் மேற்கொள்கிறோம். பலருக்கு வழிகாட்டக் கூடிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிலைப் பாட்டை நாம் எடுத்திருக்கிறோம். வி.சி.க.வை சமூக இயக்கம் என்ற நிலையிலிருந்து, அரசியல் இயக்கமாக உருவாக்கும் பரிணாம மாற்றத்துக்கான ஏற்பாடுகளைச் செய்கிறோம்.
தாழ்த்தப்பட்டோர் அல்லாதவர் கள், பெண்கள், இளம் தலைமுறை ஆகி யோர் இணையவேண்டும் என அறை கூவல் விடுத்தோம். அதன் அடிப் படையில் கட்சியில் முஸ்லிம்மக்கள் கணிசமாகச் சேர்ந்தனர். தாழ்த்தப்பட் டோர் அல்லாத கிறிஸ்தவர்கள், பிசி, எம்பிசி வகுப்பைச் சேர்ந்த சிலரும் சேர்ந் துள்ளனர்.
இந்நிலையில், கட்சியின் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் 10 சதவீதம் தாழ்த்தப்பட்டோர் அல்லாதோருக்கு இடமளிக்க இருக்கிறோம். இதை ஒதுக்கீடு என்பதைவிட அதிகார பரவலாக்கம் என்றே சொல்ல வேண் டும்.
அடுத்தபடியாக 10 சதவீதம் பெண் கள் மாவட்டச் செயலாளர்களாக கட்டாயம் இடம்பெற வேண்டும். மேலும், கட்சி நீடித்து நிலைத்திருக்க அடுத்த தலைமுறையினரை இணைப் பது அவசியம். எனவே, 25 சதவீத இளம் தலைமுறையினர் இப்பொறுப்பில் கட்டாயம் இருக்கவேண்டும்.
இவையெல்லாம் கட்சியை அரசியல் இயக்கமாக வலுப்படுத்துவதற்கான யுக்தி என்பதை உணர வேண்டும். இது கட்சியின் அகநிலை பண்பு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அடிப்படை செயல் திட்டம். இதற்கு தொண்டர்கள் ஒத்துழைக்க வேண்டும். இதை மாற்ற வேண்டும் என்ற நெருக்கடியைத் தர வேண்டாம் என்றார்.
No comments:
Post a Comment