''தி கேரளா ஸ்டோரி' படம் தியேட்டர்களில் நிறுத்தம். உண்மை சம்பவத்தை ஊருக்குச் சொல்லத் தடையா?'' என்ற தலைப்பில் இன்றைய 'தினமலரில்' ஒரு முழு பக்கக் கட்டுரை.
ஆரியர் - திராவிடர் என்ற உண்மை வரலாற்றை - வெள்ளைக்காரன் திணித்தது - அவர்களின் பிரித் தாளும் சூழ்ச்சி என்று சங்கராச்சாரி முதல் 'தின மலர்கள்'வரை திரித்துக் கூறுவதை எந்தக் கணக்கில் சேர்க்க?
மனுதர்மத்திலும், வேதத்திலும், கீதையிலும் பிறப்பின் அடிப்படையில் நான்கு வேதம் பேதம் பேசுவதை எடுத்துக் கூறினால்...
'அய்யயோ வகுப்புத் துவேஷம் வகுப்புத் துவேஷம்!' என்று அலறுவதுபற்றி ஆரியர்கள் என்ன பதில் கூறுவர்.
'ஆவணி அவிட்டம்' என்ற பெயரில் நாங்கள் துவிஜாதியினர் (இரு பிறப்பாளர்கள்) பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள் - மற்றவர்கள் வேசி மக்கள் என்று இழிவுபடுத்தும் ஜாதித் திமிரை எதிர்த்துக் கேட்டால், 'அய்யயோ, பூணூலை அறுக்கிறார்களே!' என்று அலறுவதை எந்தப் பட்டியலில் வைப்பது?
'மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதி' என்ற சுந்தரரின் சுந்தர சரித்திர எழுத்துகளுக்கு என்ன பதில்
திமிர் பிடித்த 'தினமலரே?'
No comments:
Post a Comment