சீர்காழி ச.மு .ஜெகதீசன் நினைவேந்தல் படத்திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 16, 2023

சீர்காழி ச.மு .ஜெகதீசன் நினைவேந்தல் படத்திறப்பு

மறைந்த பெரியார் பெருந்தொண்டர் சீர்காழி ச.மு . ஜெகதீசன் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி சீர்காழி தென்பாதி ராஜேஸ்வரி திருமண மஹாலில் மாவட்ட கழக தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமையில் 15 5 2023 அன்று காலை 10 மணி அளவில் நடைபெற்றது. காவியா வரவேற்புரை ஆற்றினார். கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் மறைந்த பெரியார் பெருந்தொண்டரின் படத்தினை திறந்து வைத்து நினைவு உரையாற்றினார். நிகழ்வில் கலந்து கொண்டு கழக நிர்வாகிகள் சந்திரசேகரன், செல்வம், பாண்டுரங்கன், பாண்டியன், கொக்கூர் முருகையன், இளமாறன், மறுவாய் சேகர், தினமோகன், ஞான வள்ளுவன், பெரியார் செல்வம், ராஜேந்திரன், முத்தையன், கோபால், கமலநாதன், கவிஞர் வெண்மணி, சட்டநாதன், சம்மந்தம், சீனி முத்து, ராஜவேல், ஆகியோர் நினைவு உரையாற்றினர். அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடம் வீரவணக்கம் செலுத்தினர். முடிவில் கவி நன்றி கூறினார். மறைந்த ஜெகதீசனாரின் வாழ்விணையர் வசந்தா மற்றும் மகள்கள் பேரப்பிள்ளைகள் மருமக்கள் ஆகியோருக்கு கழகத் தோழர்கள் ஆறுதல் கூறினர்.


No comments:

Post a Comment