புதுடில்லி, மே 22 ஒன்றிய அரசுக்கும், டில்லி அரசுக்கும் இடையேயான மோதலுக்கு மத்தியில் அரவிந்த் கெஜ்ரிவாலை நிதிஷ்குமார் சந்தித்துப் பேசி னார். டில்லி அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் அவசர சட்ட விவகாரத்தில் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்தார். நாடு அடுத்த ஆண்டு மக்கள வைத் தேர்தலைச் சந்திக்க உள்ளது. அந்தத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து விட வேண்டும் என்ற முயற்சியில் அய்க்கிய ஜனதாதளம் கட் சியின் தலைவரும், பீகார் முதலமைச்ச ருமான நிதிஷ்குமார் இறங்கி உள்ளார்.
அவர் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்துப் பேசி வரு கிறார். 20.5.2023 அன்று பெங்களூருவில் நடந்த கருநாடக முதலமைச்சர் சித்த ராமையா பதவி ஏற்பு விழாவில் அவர் கலந்து கொண்டு விட்டு நேராக டில்லி சென்றார்.
அங்கு நேற்று (21.5.2023) அவர், ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவரும், பீகார் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவுடன் சேர்ந்து, ஆம் ஆத்மி கட்சித்தலைவரும், டெல்லி முதலமைச்சர்யுமான அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். கருநாடக முதலமைச்சர் சித்தராமையா பதவி ஏற்பு விழாவில் பா.ஜ.க. அல்லாத முதலமைச்சர்களை அழைத்த காங்கிரஸ், டில்லி முதல மைச்சர் கெஜ்ரிவாலை அழைக்காத நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது. ஆனால் இது தொடர்பாக இந்த சந்திப்பில் பேசப்பட்டதா என தகவல் இல்லை. டில்லியில் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அதிகாரிகள் நியமனம், அதிகாரம் ஆகியவற்றில் மாநில அர சின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் ஒன்றிய அரசு தேசியத்தலைநகர் பணி யாளர் குடிமைப்பணிகள் ஆணையம் அமைக்க வகை செய்யும் அவசர சட்டத்தை கொண்டு வந்திருப்பது இரு தரப்பு மோதலை புதிய உச்சத்துக்கு கொண்டு போய் உள்ளது. அந்த வகை யில், ஒன்றிய அரசுடனான அதிகார மோதல் விவகாரத்தில், கெஜ்ரிவால் அரசுக்கு நிதிஷ்குமார் தனது முழுமை யான ஆதரவைத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர்களுடன்
இந்த சந்திப்புக்குப் பின்னர் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:- ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்துக்கு மாற் றாக மசோதா கொண்டு வருகிறபோது அதை மாநிலங்களவையில் தோற்கடிக்க வேண்டும். இதற்காக அனைத்து எதிர்க்கட்சித்தலைவர்களுடனும் நான் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்வேன். நாளை (23.5.2023) நான் கொல்கத்தா செல்கிறேன். அன்று மாலை 3 மணிக்கு மேற்கு வங்காள மாநில முதலமைச்சர் மம்தா சந்திக் கிறேன். அதைத் தொடர்ந்து அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்திக் கிறேன். இந்த விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் பேசு மாறு நிதிஷ்குமாரைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
அவசர சட்டத்தை தோற்கடிக்க...
இந்த மசோதா மாநிலங்களவையில் தோற்கடிக்கப்பட்டு விட்டால், அது அடுத்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. தோல்வியைத் தழுவும் என்ற செய்தியை விடுக்கும். இதுதான் மக்களவைத் தேர்தலுக்கான செமிபைனல் (அரை இறுதி) ஆகும். இவ்வாறு அவர் கூறினார். பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கூறியதாவது:- தேர்ந்தெடுக் கப்பட்ட அரசின் அதிகாரம் பறிக்கப் பட்டுள்ளது. இதை எப்படி செய்ய முடியும்? அரசியல் சாசனத்தைப் பாருங்கள். எது சரியென்று பாருங்கள். அவர் (கெஜ்ரிவால்) சொல்வது சரி. நாங்கள் அவருடன் முழுமையாக இருக்கிறோம். கெஜ்ரிவால் டில்லியில் நன்றாக பணியாற்றுகிறார். ஆனால் அவரது அரசை செயல்பட விடாமல் தடுப்பது வியப்பைத் தருகிறது. கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் நான் ஈடு படுவேன். அவசர சட்ட விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைமையுடன் பேசுவேன். கெஜ்ரிவாலுக்கு ஆதரவு அளிப்பதை யாரும் எதிர்ப்பார்கள் என்று நான் கருதவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment