எச்சரிக்கை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 9, 2023

எச்சரிக்கை!

செல்போன் சார்ஜில் இருந்தபோது பேசியவர் உயிரிழப்பு: மின்சாரம் பாய்ந்து

சென்னை, மே 9 - பழைய வண்ணையில் அலை பேசியை மின்னிணைப்பில் போட்டபடி பேசிய டீ மாஸ்டர் மின்சாரம் பாய்ந்து இறந்தார். பழைய வண்ணை, கெனால் தெருவைச் சேர்ந்தவர் காமராஜ் (22). இவர் மூலக்கொத்தளம் பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்தார்.

அங்குள்ள வீடு ஒன்றில் வாடகைக்கு தங்கி இருந்தார். நேற்று முன்தினம் (7.5.2023) இரவு பணி முடித்து வீட்டுக்குச் சென்ற காமராஜ் அலைபேசியை மின்னிணைப்பில் போட்டுவிட்டு அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத வித மாக மின்சாரம் பாய்ந்ததில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி, வண்ணாரப்பேட்டை காவல் துறையினர் சம்பவ இடம் விரைந்து காமராஜ் சடலத்தை மீட்டு உடற் கூராய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment