பெரியார் பன்னாட்டு அமைப்புக்கு நன்றி
ஆசிரியர் கடல் அலைகளை பார்ப்பதை போல ஒரு ஒளிப்படம் சமூக வலைதளங்களில் வைர லானது. அந்தப் படம் விடுதலையிலும் வெளிவந்து பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பாக படம் குறித்து கருத்துக்களை கவிதைகளாக எழுதிட கேட்டுக்கொண்டது. அதன் அடிப்படையில் கடல் அலைகளைப் பார்த்து ஆசிரியர் மனதுக்குள் பேசிக் கொண்டதைப் போல நான் எழுதியிருந்தேன்
அலைகளே
உனக்கும் எனக்கும்
ஒரு
ஒற்றுமையை பாரேன்
ஓய்வென்பது நமக்கு
இல்லவே இல்லை
என்று என்னைப் போலவே பலரும் எழுதி யிருந்தார்கள்.
விடுதலை ஞாயிறு மலரில் வெளிவந்தது. எழுதியவர்களை பாராட்டும் வகையில் பெரியார் பன்னாட்டு அமைப்பு சார்பாக பரிசாக நூல்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அறிவித்ததைப் போலவே "தோழர் நாகம்மையார்" என்ற நூல் வீடு தேடி வந்தது.
நூற்றுக்கணக்கான புத்தகங்களை விலை கொடுத்து வாங்கி இருந்தாலும் கிடைக்காத மகிழ்ச்சி பெரியார் திடலில் இருந்து பரிசாக கிடைத்தது என் வாழ்நாளில் நான் பெற்ற பெரும்பேறு. அந்த நூல் எனக்கு கிடைத்த ஒரு பெரும் "பொக்கிஷம்" என்றே கருதுகிறேன்.
நூலை வழங்கிய பெரியார் பன்னாட்டு அமைப்பு அதன் தலைவர் மருத்துவர் சோம.இளங்கோவன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் முனைவர் வா.நேரு ஆகியோருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
- தி.க. காளிமுத்து
மாவட்ட துணை செயலாளர்,
கோவை மாவட்ட திராவிடர் கழகம்
No comments:
Post a Comment