ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளை மதிக்க வேண்டும் பிரதமர் மோடி முன்னிலையில் காங்கிரஸ் முதலமைச்சர் அசோக் கெலாட் வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 11, 2023

ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளை மதிக்க வேண்டும் பிரதமர் மோடி முன்னிலையில் காங்கிரஸ் முதலமைச்சர் அசோக் கெலாட் வலியுறுத்தல்

ஜெய்ப்பூர்,மே11- ராஜஸ்தானில் பிரதமர் மோடி கலந்து கொண்டு வளர்ச்சித்திட்டங்களைத் தொடங்கி வைத்துப்பேசிய விழாவில், அந்த மாநில காங்கிரஸ் முதலமைச்சர் அசோக் கெலாட்டும் கலந்து கொண்டார். அப் போது அவர் ஆளும்கட்சி யும், எதிர்க்கட்சியும் இணைந்து செயல்பட வேண்டியதின் முக்கியத்து வத்தை வலியுறுத்திப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஜனநாயகத்தில் பகைமைக்கு இடம் இல்லை. சித்தாந்த சண்டைகளுக்குத்தான் இடம் உண்டு. எல்லோருக்கும் பேசுவ தற்கு உரிமை இருக்கிறது. நாட்டில் எல்லா மதத் தினர், ஜாதியினர் இடை யேயும் அன்பும், சகோ தரத்துவமும் இருக்க வேண்டும்.

எதிர்க்கட்சிகளை மதிக்க வேண்டும். இந்த திசையில் நீங்களும் (பிரத மர் மோடி) செல்வீர்கள் என்று நான் கருதுகிறேன். இது மட்டும் நடந்து விட்டால், ஆளுங்கட்சி யும், எதிர்க்கட்சியும் இணைந்து நாட்டுக்கு இன்னும் அதிக வீரியத் துடன் பணியாற்ற முடியும்.

மேனாள் பிரதமர் இந்திரா காந்தி நாடு ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்பதற்காக தனது இன்னுயிரை நீத்தார். அவர் பஞ்சாப் மாநிலத்தைப் பிரித்து காலிஸ்தான் உருவாவதை அனுமதிக்கவில்லை. 

மேனாள் பிரதமர் ராஜீவ் காந்தியும் படு கொலை செய்யப்பட்டார்.

நாம் அனைவரும் ஒற்றுமையாய் நடை போட்டால், நாடு ஒன்றாக இருக்கும், ஒற்றுமை யாகவும் இருக்கும்.

பதற்றமும், வன் முறையும் வளர்ச்சியைத் தடுத்துவிடும். நீங்கள் (பிரதமர் மோடி) விடுக் கும் செய்தி, நாட்டை ஒன்றுபட்டிருக்கச் செய்யும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் கூறினார்.

பிரதமர் மோடி முன்னிலையில் அசோக் கெலாட் பேசிய இந்தப் பேச்சு அரசியல் அரங்கில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விழாவில் அசோக் கெலாட் பேச எழுந்தபோது, கூட்டத் தினர் எழுந்து "மோடி மோடி" என முழக்கமிட் டனர். அப்போது பிரத மர் மோடி கூட்டத்தின ரைப் பார்த்து "நீங்கள் உட்காருங்கள், அப் போதுதான் அசோக் கெலாட் இடையூறின்றி பேச முடியும்" என குறிப்பால் உணர்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment