நாகை, மே 24- நாகப்பட்டினம் மாவட்ட பகுத்தறிவாளர் கழ கம் மற்றும் பகுத்தறிவு ஆசிரியர் அணி கலந்துரையாடல் கூட் டம் 21.05.2023 ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை வேதாரண்யம், தமிழ்த்தென்றல் வளாகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பகுத்தறிவா ளர் கழகம் மாவட்டத் தலைவர் மு. க. ஜீவா தலைமை வகித்தார். பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் கவிஞூர் புயல் சு. குமார் வரவேற்புரையாற்றி னார். மாவட்ட கழகக் காப்பா ளர்கள் கி. முருகையன், சு. கிருட்டிணமூர்த்தி, மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.நெப்போ லியன், மாவட்டச் செயலாளர் ஜே.புபேஇகுப்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா. தமிழ்ச் செல்வன், பகுத்தறிவு ஆசிரியர் அணி தலைவர் வ. தமிழ் பிர பாகரன், பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்பாளர் இரா. சிவக்குமார், பகுத்தறிவாளர் கழகம் அமைப்பாளர் இல. மேக நாதன் ஆகியோர் வழிகாட்டுத லுரை வழங்கினர்.
கூட்டத்தில் பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு ஆசிரியர் அணி மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் இரா. முத்துகிருட்டிணன், சி. தங்கையன்,
ஆ. பா. தர்மதுரை, அ. சிவ ராமன், சா. பாசுகரன் திரா விடர் கழகப் பொறுப்பாளர்கள் தெ.ஆறுமுகம், சி. பஞ்சபகே சன், ரமேஷ் அலமேலு, வட் டாட்சியர் க. ரமேஷ், ஆ. வீர மணி உள்ளிட்டோர் கருத்து கள் வழங்கினர்.
கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
1. மாவட்டத்தில் ஒன்றிய கிளைகள் இல்லாத இரண்டு ஒன்றியங்களுக்கு கிளைகளை ஏற்படுத்தி பொறுப்பாளர் களை நியமனம் செய்தல் மாவட்டத்தில் ஒவ்வொரு கிளைக் கும் தலா 50 உறுப்பினர்கள் வீதம் மாவட்ட அளவில் 300 உறுப்பினர்களை சேர்த்தல்.
2. பெரியார் 1000 போட்டித் தேர்வில் மாவட்டத்தில் 10,000 மாணவர்களுக்குக் குறையாமல் பங்கேற்க வைப்பது.
3. அரசு அலுவலகங்கள் மற் றும் அரசு கல்வி நிறுவனங்களில் மத சார்புடைய படங்கள் வைப்பதும் வழிபாட்டுமுறை கள் நடைபெறுவதையும் சட் டப்படி நிறுத்துவது.
4. வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞூர் நூற்றாண்டு விழா ஆகியவற்றை செப்டம்ப ரில் நடத்துவது.
5. ஜுலை மாதத்தில் பெரி யாரியல் பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்து நடத்துவது. ஆகிய தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
No comments:
Post a Comment