சென்னை,மே27- சாவர்க்கர் பிறந்த நாளில் புதிய நாடாளுமன்ற கட் டடம் திறக்கப்படுவதை கண்டித்து நாளை (மே 28) வீடுகள்தோறும் கருப்புக்கொடி ஏற்ற வேண்டும் என கட்சித் தொண்டர்களை விடு தலைச் சிறுத்தைகள் கட்சித் தலை வர் திருமாவளவன் அறிவுறுத்தி யுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று (26.5.2023) விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசமைப்பு சட்டத்துக்கு எதிராகவும், ஜன நாயகத்தை குழிதோண்டிப் புதைக் கும் வகையிலும் நாடாளுமன்ற புதிய கட்டடத்தை பிரதமரே திறக்கிறார்.
குடியரசுத் தலைவர் மற்றும் மாநிலங்களவைத் தலைவரான குடியரசு துணைத் தலைவர் ஆகிய இருவரும் விழாவுக்கு அழைக்கப்பட வில்லை. அது மட்டுமின்றி தீவிர சனாதன பற்றாளர் சாவர்க்கரின் பிறந்தநாளில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது திட்டமிட்ட, உள்நோக்கத்துடன் கூடிய நடவடிக்கையே.
ஜனநாயகத்தின் கோயில் என்று கருதப்படும் நாடாளுமன்ற கட்ட டத்தை இப்படியான ஒருவரது பிறந்தநாளில் திறப்பது இந்திய மக்களுக்குச் செய்யும் அவமதிப் பாகும்.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில்தான் புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்படும் மே 28ஆம் தேதி (நாளை) விசிகவினர் அனை வரும் வீடுகள்தோறும் கருப்புக் கொடி ஏற்ற வேண்டும், கருப்பு உடை அணிய வேண்டும். இதில் உடன்பாடு உள்ள ஜனநாயக சக்தி களும் தமது கண்டனத்தை பதிவு செய்ய முன்வர வேண்டும்.
-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment