7.5.2023
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
👉 ஜாதி, மத ரீதியாக பிரித்து பார்த்தால் ‘திராவிட மாடல்' தெரியாது. மக்களுக்கு சம்பந்தமில்லாத பதவியில் இருப்ப வர்களை பற்றி கவலையில்லை என ‘திராவிட மாடல்' குறித்து சர்ச்சைக் கருத்து தெரிவித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
தி இந்து:
👉 ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்புக்கு எதிரான வழக்கை விரைவில் 'தள்ளுபடி' செய்யுமாறு பாட்னா உயர் நீதிமன்றத்தில் பீகார் அரசு மே 6 அன்று மேல்முறையீடு செய்தது. அடுத்த விசாரணையை ஜூலை 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்க மாநில அரசு மனு தாக்கல் செய்தது. பீகார் அரசின் மனுவை ஏற்றுக் கொண்ட பாட்னா உயர்நீதி மன்றம், இந்த வழக்கை மே 9ஆம் தேதி விசாரணைக்கு ஒத்திவைத்தது
- குடந்தை கருணா
No comments:
Post a Comment