திருப்பதி - போலி இணையதளங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 13, 2023

திருப்பதி - போலி இணையதளங்கள்

திருமலை, மே 13- திருமலை திருப்பதி தேவஸ்தானம் https://tirupatibalaji.ap.gov.in/ என்கிற இணைய தளத்தின் மூலம் இலவச தரிசன நுழைவுச் சீட்டு களை வழங்கி வருகிறது. மேலும் ஆர்ஜித சேவை நுழைவுச் சீட்டுகள், பக் தர்கள் தங்கும் அறைக ளுக்கான முன்பதிவு, இ-உண்டி, நன்கொடைகள் என அனைத்து சேவைக ளுக்கும் இந்த இணைய தளத்தை பக்தர்கள் பயன் படுத்திக் கொள்ளுமாறு திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது. 

மேலும், TTDevasthanams என்கிற மொபைல் செயலியையும் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இதன் மூலமாகவும் பக் தர்கள் நுழைவுச் சீட்டு, அறைகள் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந் நிலை யில் தேவஸ்தான இணைய தளத்தை போலவே பல போலி இணைய தளங் கள் இணையத்தில் உலா வருவது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இது குறித்து தேவஸ்தானத்தின் அய்.டி. பிரிவு கண்டறிந்து திருமலை காவல்துறையி னருக்கு புகார் அளித்தது. அதன்படி 41 போலி இணைய தளங்களை தடை செய்யவும், அவற் றின் மீது கிரிமினல் வழக் குகள் தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment