இஸ்லாமிய பெண் மருத்துவரின் ஹிஜாப்பை நீக்கச் சொன்ன பா.ஜ.க. பிரமுகர்
நாகப்பட்டினம், மே 26 நாகப்பட்டினம் மாவட் டம் திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் இஸ்லாமிய பெண் மருத்துவரி டம், ஹிஜாப் உடையை நீக்கக் கூறி ரகளை செய்தார்.
நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி அரசு மருத் துவ மனையில் ஜன்னத்து பேகம் என்பவர் அரசு மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந் நிலையில் கடந்த 24.5.2023 அன்று இரவு நோயாளி ஒருவர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவ மனைக்கு வந்துள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர் பேகம், நெஞ்சு வலியின் தீவிரத்தை உணர்ந்து, அவரை நாகை அரசு தலைமை மருத்து வமனைக்கு கொண்டு செல்லுமாறு பரிந்துரைத்திருக்கிறார். அப்போது அங்கு வந்த பாஜகவைச் சேர்ந்த புவனேஸ்வரராம் என்பவர் மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். மருத் துவர், நோயாளியின் தன்மை கருதி அவரை உடனடியாக தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது தான் நோயாளிக்கு நல்லது என்று கூறி இருக்கிறார். இதைக் கேட்க மறுத்த புவனேஸ்வரராம், மருத்துவரை இழிவாகப் பேசி அவர் அணிந்திருந்த ஹிஜாப் உடையை நீக்கக் கூறியும், மருத்துவமனையில் பணி புரியும் போது எதற்கு ஹிஜாப் அணிந்து இருக்கிறாய் என்றும் கூறி தகராறு செய்து, மருத்துவமனை ஊழியர்களையும் இழிவாக பேசியிருக்கிறார்.
கைது செய்யப்படவில்லை
இந்த நிலையில் அவர் மீது கீழையூர் காவல் நிலையதில் புகார் அளிக் கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப் பட்டதாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட புவ னேஸ்வரராம் இதுவரை கைது செய்யப் படவில்லை.
No comments:
Post a Comment