முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 15, 2023

முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்

 சங்பரிவார்கள் அஞ்சும் வரலாறு

கேரளாவில் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும்

கொல்லம், மே 15  கேரளாவில் வெறுப்பு ணர்வை விதைக்க சிலர் முயற்சிப்ப தாகவும், பொய்யான குற்றச்சாட்டு கள் மற்றும் பொய்ப் பிரச்சாரங்க ளுக்கு எதிராக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் சங்பரிவார்கள் அஞ்சும் வரலாறு கேரளாவில் பாடப்புத்த கங்களில் கற்பிக் கப்படும் என்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். 

ஜமாத் கூட்டமைப்பு 40ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தை துவக்கி வைத்து முதலமைச்சர் உரையாற்றினார்.

அப்போது அவர் மேலும் கூறுகையில், கடந்த  சில நாட்களாக கேரளாவைப் பற்றி  நாடு முழு வதும் மிக மோசமான படத்தை பரப்ப ஒரு குழு தொடர்ந்து  முயற்சி செய்து வருகிறது. பொய்க ளைத் திரும்பத் திரும்பச் சொல்வ தும், அவற்றை உண்மையாகக் காட்டுவதுமான பாசிச உத்தியைக் கையாளுகிறார்கள். வகுப்புவாத வன்முறை மூலம் அணிதிரட்டல் மற்றும் அரசியல் விரிவாக்கத்தை உருவாக்குவதே சங்கபரிவாரின் நோக்கம். 2014ஆம் ஆண்டு முதல்  நடந்த நிகழ்வுகளை ஆராய்ந்தால், இது புரியும். ஒரே சிவில் சட்டத்தை நோக்கி ஒன்றிய அரசு நகர்கிறது. அதன் பின்னர் இந்து ராஷ்டிரா கட்டுமானம் நடக்கும். 

நாட்டின் பொதுவான நிலை  என்னவென்றால், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் உள்ளிட்ட குழுக்கள் தங்கள் சொந்த அடையாளத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியாத நிலை உள்ளது. இதற்கு சமீபத்திய  உதாரணம் மணிப்பூர், இன்னும்  அங்கு கலவர தீ அடங்கவில்லை. சங்பரிவார்கள் எப்போதும் வர லாற்றைக் கண்டு பயப்படு கிறார்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்தை காட்டிக்கொடுத்த பாரம்பரியத்தை கொண்டவர்கள் அவர்கள். இந் நாட்டின் உண்மையான வர லாற்றை நினைத்துப் பார்க்கும் போது அவர்களுக்கு கவலை ஏற்படுவது இயல்புதான். இந்திய வரலாற்றின் பன்மைத்து வத்தை கண்டு அவர்கள்  அஞ்சு கிறார்கள். தேசத்தந்தை காந்தியாரும் முதல் பிரதமர் நேருவும் பாடப்  புத்த கங்களில் இருந்து வெட்டப் படுகிறார்கள். 

இப்போது நாட்டின் முதல் கல்வி அமைச்சர் மவலானா அப்  துல் கலாம் ஆசாத்தும் பாடப்புத்த கங்களில் இருந்து வெளியேற்றப் பட்டுள்ளார். முகலாயப் பேரரசு பற்றிய பாடங்களை நீக்கவும் என்சிஇஆர்டி முடிவு செய்துள் ளது. படிப்புகளை நீக்கினால் வரலாற்றை அழிக்கலாம் என்று நினைப்பவர்கள் முட்டாள்களின் சொர்க்கத்தில் உள்ளனர். சங்பரி வார்கள் அஞ்சும் அனைத்து விட யங்களும் கேரள பாடப்புத்தகங்க ளில் தொடர்ந்து கற்பிக்கப்படும்.

இவ்வாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறினார்.


No comments:

Post a Comment