கழகப் பொதுக்குழுத் தீர்மானங்களை செயல்படுத்த முடிவு குமரி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 17, 2023

கழகப் பொதுக்குழுத் தீர்மானங்களை செயல்படுத்த முடிவு குமரி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

நாகர்கோவில், மே 17- குமரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்  நாகர்கோவில், ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது. 

மாவட்டத்  தலைவர் மா.மு.சுப் பிரமணியம் தலைமை உரையாற் றினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார்.  மாவட்ட துணைத் தலைவர் ச. நல்ல பெருமாள் வரவேற்றுப் பேசினார். மாவட்ட பகுத்தறிவாளர்கழக தலைவர் உ.சிவதாணு,  மாநில பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன் ஆகியோர் கருத்துரை ஆற்றினர். மாநில ஒருங் கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் கழக செயல்பாடுகள் குறித்து  சிறப்புரையாற்றினார்.  மாவட்ட அமைப்பாளர் ஞா.பிரான்சிஸ், மாவட்ட ப.க. செயலர் பெரியார் தாஸ், மாவட்ட இளை ஞரணி தலைவர் இரா.இராஜேஷ், அமைப்பாளர் மு.இராஜசேகர், மாநகர துணைத் தலைவர்செய்க் முகமது, கன்னியாகுமரி கிளைக் கழக அமைப்பாளர் க.யுவான்ஸ், மாவட்ட திராவிட மாணவர் கழக அமைப்பாளர் இரா.கோகுல், கழ கத் தோழர்கள் ச.ச.மணிமேகலை, ம.செல்வராசு, பெனடிக்ட், ந.தமிழ் அரசன், கூடங்குளம் பால கிருஷ் னன், இரா.முகிலன், டார்ஜன், சவுந்தர் மற்றும் ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்

மறைவுற்ற தோழர்கள் துரை, வெற்றிச்செல்வன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் மற்றும் திராவிடர் கழ கப் பொதுக்குழு தீர்மானங்களை முழுமனதாக ஏற்று வரவேற்று  குமரிமாவட்டத்தில் செயல்படுத் துவது, மே 20 தாம்பரத்தில் நடை பெற உள்ள திராவிடர்கழக தொழி லாளர் அணி மாநில மாநாட்டில் குமரிமாவட்ட தோழர்கள் பெருந் திரளாக பங்கேற்பது, மே 31 அன்று குமரிமாவட்டம் முழுமையாக உள்ள கழக குடும்பத்தினரை  நேரில் சந்திப்பது, கன்னியாகுமரியில் வைக்கம் நூற்றாண்டு விழா, பேராசிரியர் ராமசாமி அவர்கள் எழுதிய "தந்தை பெரியாரை புரிந்து கொள்வது எப்படி?" ,"தமிழர் தலைவர் கி.வீரமணி 90"   நூல் வெளியீட்டு விழாக்களை  சிறப்பாக நடத்தி சொற்பொழிவாற்ற பேச் சாளர்  இரா.பெரியார் செல்வத்தை  அழைப்பது, அதில் தோழமை அமைப் பினரை பங்கேற்ற வைப்பது,

மூட நம்பிக்கை ஒழிப்புச் சட் டத்தை நிறைவேற்ற தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்வது  உள் ளிட்ட சிறப்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்ட முடிவில் பெரியார் பிஞ்சு இரா.முகிலன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment