புதுடில்லி,மே4 - ஒரே பாலின திருமண விவகாரத்தில் ஒழுக்க நெறி அல்லது ஒரே பாலின நெறி பற்றி நாங்கள் விவாதிக்க முடியாது. அரசமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது என்பதே எங்களுக்கு முக்கியம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்வது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதி கள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வரு கிறது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சவுரப் கிர்பால், ‘ ஒரேபாலினத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்ற பல்வேறு கருத்தரங்குகளில் கலந்து கொண்டு பேசியதில் 99 சதவீதத்தினர் தாங்கள் விரும்புவது ஒன்றே ஒன்றுதான்.
அது திருமணம் செய்துகொள்வது தான் என்று குறிப்பிட்டனர். நான் ஒரு மூத்த வழக்குரைஞர் என்ற அடிப்படையில் இதைச் சொல்லவில்லை. இந்த ஒரே பாலினத்தை சேர்ந்த இளைஞர்களை சந்தித்து பேசிய பிறகு இதைச் சொல்கிறேன்’ என்றார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ‘ இந்த வாதத்தில் வரும் உணர்வுகளை நாங்கள் புரிந்து கொள்கிறோம். நமது அரசமைப்புச் சட்ட அடிப்படையில் சிறந்த பாதுகாப்பு என்னவென்றால், அரசமைப்புச் சட்டத்தின் கட்டளையின்படி நீதிமன்றம் செல்ல வேண்டும். இதன்படி பார்க்கும் போது நாங்கள் திருமண ஒழுக்கம் அல்லது ஒரே பாலின திருமணம் ஆகியவற்றில் செல்ல வில்லை. நாங்கள் அரசமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது என்பதைப்பற்றி முடிவு செய்ய இருக் கிறோம்’என்று கூறி வழக்கு விசாரணையை மே 9ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
No comments:
Post a Comment