கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
24.5.2023
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ஒன்றிய அரசின் கொள்கையை பின்பற்றாமல் தமிழ்நாட்டின் கல்விக் கொள்கை அமைத்திட வேண்டும் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, மாநில கல்விக் கொள்கை உயர்நிலைக் குழுவிடம் மனு அளித்தார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* காவல்துறையினர் குற்றங்களை இந்த மதம் அல்லது அந்த மதம் என்ற கோணத்தில் பார்க்கக் கூடாது. அனைத்து மக்களையும் சமமாகப் பார்க்க வேண்டும் என கருநாடக முதலமைச்சர் சித்தராமைய்யா காவல்துறை அதிகாரி களுக்கு அறிவுறுத்தல்.
தி ஹிந்து:
* ஓபிசி உள் ஒதுக்கீடு குறித்து அறிக்கை அளித்திட 2017இல் அமைக்கப்பட்ட நீதிபதி ரோகினி ஆணையத்திற்கு 2021 முதல் இதுவரை சம்பளம் உள்ளிட்ட செலவுகள் குறித்து எந்த பதிவேடும் இல்லை என அரசு தகவல்.
* தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தை ஒன்றிய அரசு அவசர சட்டம் மூலம் குறைப்பது, அரசமைப்புச் சட்டம், உச்ச நீதிமன்ற தீர்ப்பு, குடி மக்களின் வாக்குரிமை ஆகியவற்றுக்கு எதிரானது என டில்லி சட்ட அமைச்சர் கைலாஷ் கெலாட் கருத்து.
தி டெலிகிராப்:
* நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது கருநாடக காவல்துறையை காவிமயமாக்க விட மாட்டோம் என அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் சூளுரை.
* டில்லி பல்கலைக்கழகத்தின் (DU) “பாடத்திட்டம் மற்றும் உள்ளடக்கம் குறித்த நிலைக்குழு” அம்பேத்கர் எழுதிய ’சமூக சமூக அமைப்பில் ஜாதி பற்றிய விமர்சனம்’, ’ஹிந்து பெண்களின் எழுச்சியும், வீழ்ச்சியும்’ என்ற இரண்டு அத்தியாயங்கள் தலைப்புகளில் இருந்து ‘ஹிந்து’ என்ற வார்த்தை நீக்க டில்லி பல்கலைக்கழகம் பரிந்துரை.
சுகாதாரக் கேடுகளை தடுக்கும் நடவடிக்கையாக, ஒடிசா மாநிலத்தில் சிவன் கோவில்களில் கஞ்சா சாப்பிட தடை விதிக்க அரசு முடிவு.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment