மின்கட்டணம்
ரூ.1000க்கு மேல் மின் கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அபராதம்
சென்னையில் மதுபோதையில் வாகனங்களை ஓட்டியது தொடர்பாக வழக்குகளில் கடந்த இரண்டு மாதங்களில் ரூ.11 கோடி அபராத தொகையை போக்கு வரத்து காவல்துறையினர் வசூலித்துள்ளனர்.
நடவடிக்கை
தொழிலாளர் நாளான மே 1ஆம் தேதி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் நிறுவனங்களில் பணிக்கு இரட்டிப்பு ஊதியம் அல்லது மாற்று விடுப்பு அளிக்கப்படாத 380 நிறுவனங்கள் மீது தொழிலாளர் ஆணையம் நடவடிக்கை.
தடுக்க...
ஒன்றிய அரசின் கீழ்வரும் அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் அதனுடைய கட்டுப்பாட்டில் வரும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் உள்பட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
நியமனம்
தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக பணியாற்றி வநத டி.ஜி.பி. கந்தசாமி கடந்த 28ஆம் தேதி ஓய்வு பெற்றதையடுத்து லஞ்ச ஒழிப்புத் தறை இயக்குந ராக கூடுதல் டி.ஜி.பி. அபய்குமார் சிங் நியமனம்.
அவகாசம்
தென்பெண்ணை நீர் நடுவர் மன்றம் அமைக்க ஒன்றிய அரசுக்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment