.....செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 15, 2023

.....செய்தியும், சிந்தனையும்....!

அக்கப்போர் அண்ணாமலை

★2024 மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி., கருநாடகத்தில் 26 தொகுதிகளுக்குமேல் கைப்பற்றும்.

- தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை

>> கருநாடக சட்டசபை தேர்தலில் இப்படித்தான் முழங்கினார்; நிலைமை என்னாயிற்று? இதற்குப் பெயர்தான் ‘அக்கப்போர் அண்ணாமலை' என்பது.

அந்த ஞாபகம்தான் வருகிறது...

சிறீரங்கத்தில் கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது வேத பாடசாலை மாணவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

>> ‘வேதம் புதிது' திரைப்படத்தில் இனமுரசு நடிகர் சத்யராஜ் கூறுவாரே, ‘‘வேதம் தெரிவதெல்லாம் இருக்கட்டும்; முதலில் நீச்சல் அடிக்கத் தெரியுமா?'' என்று கேட்டாரே, அந்த ஞாபகம்தான் வருகிறது.

No comments:

Post a Comment