மறுப்பாம்
பொது நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் புகையிலை தயாரிப்புக்குத் தடை விதிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுப்புத் தெரிவித்துள்ளது.
புயல்
வங்கக் கடலில் நிலை கொண்ட ‘மொக்கா' புயல் தற்போது வங்கதேசம் நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக மத்திய வங்கக் கடல் பகுதியில் இன்று மணிக்கு 16.5 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீச வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மய்யம் தகவல்.
நியமனம்
தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கான (100 நாள் வேலை) குறை தீர்ப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பொது மக்கள் இத்திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்கள் ஏதும் இருப்பின் குறை தீர்ப்பாளர்களிடம் தெரிவிக்கலாம்.
ஏமாற...
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் தொடர்பாக போலி தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுகள்
பி.எட்., எம்.எட். வகுப்புகளுக்கான இறுதிப் பருவத் தேர்வுகளை ஜூன் மாதம் 2ஆவது வாரத்தில் நடத்த ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் திட்டமிட்டு உள்ளது.
மானியம்
தமிழ்நாடு சிமென்ட் கழகத்தில் விற்பனை முகவர் திட்டத்தில் ஆதி திரவிடர் மற்றும் பழங்குடியின மக் களுக்கு மானியம் வழங்கப்படும். இதற்கு ஆதி திரா விடர் மற்றும் பழங்குடியினரிடமிருந்து விண்ணப்பங் கள் வரவேற்கப்படுகிறது என சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி தகவல்.
புதிய படிப்பு
நாட்டிலேயே முதல் முறையாக மருத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தில் 4 ஆண்டு புதிய பட்டப்படிப்பு, சென்னை அய்.அய்டி.யி.ல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இப்படிப்பில் இந்த ஆண்டே மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
அங்கீகாரம்
வெளிநாட்டில் மருத்துவம் படித்துவிட்டு எப்எம்ஜி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், மருத்துவக் கல்லூரி களில் கட்டணம் செலுத்தி உள்ளுறை பயிற்சி பெற்று வருகின்றனர். இவ்வாறு பயிற்சி பெறும் காலத்தை அங்கீகரிப்பதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment