புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தில் திட்டங்கள் மற்றும் நிர்வாக உதவியாளர் (Programme cum Administrative Assistant) பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப் படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 20.05.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
திட்டங்கள் மற்றும் நிர்வாக உதவியாளர் காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப் பட்ட பல்கலைக் கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ. 12,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியா னவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads /2023/05/2023051221.pdf என்ற இணைய தளப் பக்கத்தில் அறிவிப் புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப் பத்தினை பூர்த்தி செய்து, தேவை யான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரிலோ அல்லது தபாலிலோ சமர்ப்பிக்க வேண்டும்.
முகவரி : துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், பழைய பேருந்து நிலையம் அருகில், நீதிமன்ற வளாகத்திற்கு எதிரில், மதுரை ரோடு, புதுக்கோட்டை - 622001.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.05.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய :https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2023/05/2023051263.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
No comments:
Post a Comment