நடவடிக்கை
தமிழ்நாட்டில் போலி ஆவணங்கள் மூலம் வாங்கப்பட்ட சுமார் 56,000 சிம் கார்டுகளை முடக்க காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இருக்காது
கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீர் பூண்டி நீர்த்தேக்கம் வந்ததால் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என நீர் வளத்துறை அதிகாரிகள் தகவல்.
புயலாக...
தென்னிந்திய பகுதியில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. நேற்றும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில், தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இன்று ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என வானிலை மய்யம் தகவல்.
தூண்டில்...
தமிழ்நாட்டில் கடலோர கிராமங்களில், கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவுகளை அமைக்க பசுமை தீர்ப்பாயம் விதித்த தடையை நீக்க ஏன் ஒன்றிய மற்றும் மாநில அரசு முயற்சி செய்யவில்லை என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
No comments:
Post a Comment