27.5.2023
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
றீ மோடி அரசின் 9 ஆண்டுகள் நிறைவடைந் துள்ள நிலையில், பொருளாதாரம் மற்றும் ஊழல் முதல் கோவிட்-19 மற்றும் சமூக நீதி வரையிலான கேள்விகளை பட்டியலிட்டு, ’ஒன்பது ஆண்டு, ஒன்பது கேள்விகள்’ என்ற ஆவணத்தை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இதற்கு மோடி அரசு பதிலளிக்க வேண்டும் என்று கேட்டுள்ளது.
றீ மோடி அரசாங்கத்தின் நாடாளுமன்ற செயல் முறையில் வெட்கக்கேடான கேலிக்கூத்தாக ஆறு நிகழ்வுகளை பட்டியலிட்டுள்ளார் திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓ பிரைன். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது முதல் நான்கு ஆண்டுகளாக மக்களவையில் மக்களவை துணைத் தலைவர் நியமிக்கப்படாதது வரை - நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் சாதனை பதிவில் பல சந்தேகத்திற்குரிய முதல் நிலைகள் உள்ளன என குற்றச்சாட்டு.
தி டெலிகிராப்:
றீ செங்கோல் மீதான பிஜேபியின் அதிகார மாற்றக் கோரிக்கை குறித்து கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், 1947 இல் இந்து ராஷ்டிரம் நிறுவப்பட்டது போல, முழு நிகழ்வையும் இந்து மயமாக்கும் முயற்சி இது என கண்டனம்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment