பா.ஜ.க. ஆட்சியின் லட்சணம்! மணிப்பூரில் பதற்றம் மேலும் மேலும் அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 25, 2023

பா.ஜ.க. ஆட்சியின் லட்சணம்! மணிப்பூரில் பதற்றம் மேலும் மேலும் அதிகரிப்பு

இம்பால், மே 25 -  புதிய வன்முறை நிகழ்வுகளால் மணிப்பூரில் பதற்றம் நீடிக்கிறது. வணிக நிறுவனங் கள் மூடப்பட்டன. 

வடகிழக்கு மாநிலமான மணிப் பூரில், பெரும்பான்மையாக வசிக் கும் மெய்தி இன மக்கள், தங்களுக்கு பழங்குடியின தகுதி அளிக்கக்கோரி குரல் கொடுத்து வருகிறார்கள். அதற்கு அங்குள்ள நாகா, குகி என்ற பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

கடந்த 3ஆம் தேதி, பழங்குடியின மக்கள் நடத்திய பேரணி, வன்முறையில் முடிந்தது. இரு தரப்புக்கும் இடையே கலவரம் மூண்டது. 70 பேர் பலியானார்கள். கலவரத்தை ஒடுக்க ராணுவம், காவல் துறையினர் என 10 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஒரு வாரத்தில் அமைதி திரும் பிய நிலையில்,  22.5.2023 அன்று மீண்டும் வன்முறை வெடித்தது. மணிப்பூர் கிழக்கு மாவட்டம் நியூ செகோன் பகுதி யில் கடைகளை அடைக்குமாறு மேனாள் சட்டமன்ற உறுப்பினர் உள்பட 4 பேர் கொண்ட ஆயுதம் தாங்கிய கும்பல் அச்சுறுத்தல் விடுத்தது.

அதைத் தொடர்ந்து ஒரு கும்பல் 2 வீடுகளை தீயிட்டு கொளுத்தியது. அந்த வீட்டில் ஆள்கள் இல்லாததால், உயிர்ச் சேதம் இல்லை. இதைத்தொடர்ந்து, இம்பால் கிழக்கு மாவட்டம் புகாவோ, லெய்டான்போக்பி உள் ளிட்ட பகுதிகளில் உள்ளூர் மக்கள் தங்கள் வீடுகள் மீது தாக்கு தல் நடத்தப்படுவதை தடுக்க உரி மம் பெற்ற துப்பாக்கிகளுடன் காவல் இருக்க தொடங்கினர். அவர்கள் பதுங்கு குழிகளையும் வெட்டி இருந்தனர். அத்தகைய 5 பதுங்கு குழிகளை பாதுகாப்பு படையினர் அழித்தனர்.

இந்நிலையில், 23.5.2023 அன்று மணிப்பூர் மாநிலம் அமைதியாக காணப்பட்டது. இருப்பினும், பதற்ற மாக இருந்தது. வன்முறை நடந்த நியூ செகோன் பகுதியில் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு இருந் தன. பொது மக்கள் வீட்டுக் குள்ளேயே இருக்குமாறு 'ஒலி பெருக்கி' மூலம் பாதுகாப்பு படையினர் அறிவுறுத்தியபடி சென் றனர்.

பள்ளத்தாக்கு பகுதியில் வசிக் கும் 'மெய்தி' இன மக்கள், பழங்குடியின பயங்கரவாதிகள் தங்கள் பகுதியில் நுழைந்து திடீர் தாக்கு தல் நடத்துவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி, மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். பெரும்பா லானோர் பெண்கள் ஆவர்.

ஊரடங்கு தளர்வு

2 மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அம லில் இருக்கிறது. முதலமைச்சர் பிரேன் சிங், அப்பாவி மக்களின் வீடுகளை எரிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள் ளார். அவர் மேலும் கூறியதாவது:-

வன்முறை தொடர்பாக மேனாள் சட்டமன்ற உறுப்பினர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சமூக வலைத்தளங்களில் வதந்தியையும், வெறுப்பையும் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய படைகளில் இருந்து மேலும் 20 கம்பெனி படையினரை கேட்டுப்பெற முடிவு செய்துள்ளோம். ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. இணைய தள சேவை தொடர்ந்து முடக்கப் பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment