நீலமலை, மே 24 - நீலமலை மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் மருத்துவர் இரா.கவுதமன் இல்லத் தில் கடந்த 7.5.2023 அன்று நடை பெற்றது. மருத்துவர் இரா.கவுத மன் தலைமையில் தலைமையில் மாவட்டச்செயலாளர் மு.நாகேந் திரன் முன்னிலையில் கழகப் பொறுப்பாளர்கள் கலந்துகொண் டனர். கலந்துரையாடல் கூட்டத் தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள் விவரம் வரு மாறு,
தீர்மானம் - 1
கோவை மண்டல செயலாளர் சிற்றரசு 16.4.2023 அன்று இயற்கை எய்தினார். அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக 1 நிமிடம் அமைதி கடைப்பிடிக்கப்பட்டது.
தீர்மானம் - 2
பொதுக்குழு உறப்பினர் இரா வணன், நீலமலை மாவட்டத்தில் விடுதலையைக் கொண்டு சேர்த்து மிகப் பெரிய களப்பணியை செய்து வரும் பொதுக்குழு உறுப்பினர் இராவணனுக்குப் பாராட்டு தெரி விக்கப்படுகிறது.
தீர்மானம் -3
இயக்க வளர்ச்சிக்கும் - விடுதலை சேர்ப்பது என இயக்க கொள்கையினை வேகமாக மக்கள் மத்தியில் கொண்டு செல்வதென தீர்மானிக் கப்படுகிறது.
தீர்மானம் - 4
மல்லிக்கு இன்று (7.5.2023) 56ஆம் பிறந்த நாள். ஆனால், இன்று அவர் நம்மிடையே இல்லை. தமிழர் தலைவர் சொல் வதுபோல் இயற்கையின் கோணல் புத்தி தீர்மானித்து விட்டது. நம் மிடம் என்றம் நினைவில் வாழும் மல்லி அவர்களுக்கு இந்தக் கூட் டம் வீரவணக்கம் செலுத்துகிறது.
No comments:
Post a Comment