ஓசூர், மே 5- ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் நிலையில் தண்ணீரோடு சேர்ந்து வரும் ரசாயன நுரை அருகில் உள்ள விளை நிலங்களை சூழ்வதால் 50 ஏக்கர் விவசாய நிலம்பாதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணைக்கு வினாடிக்கு 640 கன அடி நீர் வருகின்றது. உபரி நீர் 6 மதகுகள் வழியாக தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது.
வெளியேற்றப்படும் நீரில் அதிக நுரை பொங்கி பனிமாலைப்போல ஆற்றில் மிதந்து செல்கிறது. இந்த ரசாயன நுரை கரையோரம் உள்ள விவசாய நிலங்களை சூழ்வதால் 50 ஏக்கர் விவசாயம் நிலம் பாதிக்கப்பட்டுள்ள தால் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். கருநாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து ரசாயன கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் அப் படியே ஆற்றில் கலப்பதால் இந்த பிரச்சினை ஏற்படுவ தாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
No comments:
Post a Comment