செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 18, 2023

செய்திச் சுருக்கம்

ஒப்பந்தம்

சென்னை அய்அய்டியில் நீர்வள மேலாண்மை மற்றும் நீர் தொழில்நுட்ப கூட்டு ஆராய்ச்சி தொடர்பாக இஸ்ரேல் - இந்தியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

வெளியீடு

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 1,021 மருத்துவ இடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவை ஓரிரு வாரத்தில் வெளியிட எம்ஆர்பி திட்டமிட்டுள்ளது.

விருது

தொழில் முனைவோர் விருது அல்லது உற்பத்தி தொழில் முனைவோர், சேவை தொழில் முனைவோர், மற்றும் தொழில் துறையின் சிறப்புப் பிரிவு மாநில விருது, மாவட்ட விருது, வங்கி விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்புதல்

சென்னை அய்சிஎஃப் உள்ளிட்ட 3 ரயில் பெட்டி தயாரிப்புத் தொழிற்சாலைகளில் 2024-2025ஆம் நிதியாண்டில் 6,991 ரயில பெட்டிகளைத் தயாரிக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

மின் விநியோகம்

சென்னையில் இரவு நேரங்களில் சீரான மின் விநியோகம் செய்வதற்காக 24 மணி நேரமும் ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மின் விநியோகத்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் நேரில் சென்று சரி செய்யுமாறு செயற் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மின் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தகவல்.

அரசாணை

வரும் ஜூன் 3ஆம் தேதி மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளன்று சத்துணவு மற்றும் குழந்தைகள் மய்யங்களில் 59.12 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு  பொங்கல் வழங்க அனுமதியளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

சொத்து

இந்தியாவில் 1 மில்லியன் டாலருக்கு (ரூ.8.2 கோடி) மேல் சொத்து மதிப்பு கொண்டவர்களின் எண்ணிக்கை 7,97,714ஆக உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 17 லட்சமாக உயரும் என்று நைட்பிராங்க் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தகவல்.


No comments:

Post a Comment