மதுரை, மே 7- கண்காணிப்பு கேமராவில் விபூதி தூவி திருப்பரங்குன்றம் மலை கோவிலில் வேல் உள்ளிட்ட பொருட்கள் திருட்டுபோனது
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காசி விசு வநாதர் கோவில் மற்றும் மலைமேல் குமரர் என்று அழைக்கப்படும் முருகனின் தனி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 5.5.2023 அன்று மாலையில் பூஜையை முடித்துவிட்டு வெளிப்பிரகார கதவில் பூட்டு போட்டு வந்து விட்டனர். இந்த நிலை யில் சிலர் பூட்டை உடைத்து உள்ளே புகுந் துள்ளனர்.
பின்னர் அவர்கள் முருகனின் கரத்திலிருந்த சுமார் 3 அடி உயரமுள்ள வேல், குத்துவிளக்கு உள் ளிட்ட பூஜை பொருட் களை திருடி உள்ளனர். இந்த நிலையில் காசிவிசுவநாதர் கோவிலில் இருந்த பீரோவை உடைத்துள்ளனர். அதில் இருந்த ஒரு சில பொருட்களையும் திருடி உள்ளனர்.
இந்த நிலையில் காவல் துறையில் தங்களை அடையாளம் தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் விபூதியை ஊதி மறைத்துள்ளனர். மேலும் அவர்கள் கண் காணிப்பு கேமராவின் பதிவு சேமிக்ககூடிய ஹார்டுடிஸ்க்கையும் திருடி சென்றுவிட்டனர்.
இதுதொடர்பாக திருப்பரங்குன்றம் காவல்துறையில் கோவில் நிர்வாகம் புகார் செய்துள்ளது. அதன் பேரில் காவல்துறையி னர் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment