சென்னை,மே28 - சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக் கப்பட்ட பள்ளிகளில் உள்கட்டமைப்பு மேம் பாட்டு பணிகளை மேற் கொள்வது தொடர்பாக மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா நேரில் ஆய்வு செய்தார்.
சென்னை மாநகராட் சியில் புதிதாக சேர்க்கப் பட்ட பகுதிகளில் உள்ள 790 பள்ளிகளில் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற் றும் சென்னை மாவட் டத்துக்குள் ஒரு பள்ளி உட்பட 139பள்ளிகள் சென்னை மாநகராட்சி நிர்வாகத்திடம் பள்ளிக் கல்வித்துறை ஒப்படைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, மாநக ராட்சி மேயர் ஆர்.பிரியா 181ஆவது வார்டுக்கு உட்பட்ட கொட்டிவாக் கம், குப்பம்சாலையில் உள்ள செயின்ட் தாமஸ் மவுண்ட் பஞ்சாயத்து வாரிய பள்ளியில் உள்ள பழைய கட்டிடத்தை இடித்து விட்டு, புதிய பள்ளிக் கட்டிடங்கள் கட்டுவது தொடர்பாக 26.5.2023 அன்று ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, 186ஆவது வார்டுக்கு உட்பட்ட பெருங்குடி, பள்ளி சாலை யில் உள்ள பஞ்சாயத்து தொடக்கப் பள்ளியில் கூடுதலாக வகுப்பறைகள் கட்டுவது தொடர்பா கவும், 189ஆவது வார் டுக்கு உட்பட்ட நாராய ணபுரத்தில், தாம்பரம்- வேளச்சேரி பிரதான சாலையில் உள்ளபஞ்சாயத்து தொடக்கப் பள்ளியில்கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறை கள் மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பா கவும், 191ஆவது வார்டுக்கு உட் பட்ட ஜல்லடியான் பேட்டை, வீராத்தம்மன் கோயில் தெருவில் உள்ள பஞ்சாயத்து ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் கழிப் பறை கட்டுதல் மற்றும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளுதல் தொடர்பாகவும், 188ஆவது வார்டுக்கு உட் பட்ட பள்ளிக்கரணை, மயிலை பாலாஜி நகர் பஞ்சாயத்து ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் அமைத்தல், சமையலறை கட்டுதல், கழிப்பிடம் மற்றும் இதர புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளுதல் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், சோழிங்கநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப் பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ், நிலைக் குழுத் தலைவர் (கல்வி) த.விசுவநாதன், துணை ஆணையர் (கல்வி) ஷரண்யா அறி, தெற்கு வட்டார துணை ஆணை யர் எம்.பி.அமித், மண் டலக் குழுத் தலைவர் எஸ்.வி. ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் உடனி ருந்தனர்.
No comments:
Post a Comment