இந்தியாவின் போக்கையே மாற்றிய நாள் இன்று! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 17, 2023

இந்தியாவின் போக்கையே மாற்றிய நாள் இன்று!

கோழிக்கோடு கரையோரம் சுமார் 6 நாள்கள் அய்ரோப்பியக் கப்பல் ஒன்று நங்கூரம் பாய்ச்சி நின்றது. அதில் இருந்த நபர்களிடம் கோழிக் கோட்டின் கடற்கரையில் இருந்த அப் பகுதி மீனவர் குழுத் தலைவர்கள் அவர்கள் யார், எங்கு வந்தனர், எதற்கு வந்தனர் என்று கேள்வி எழுப்பு கின்றனர். 

தென் இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை சார்ந்து அக் காலத்தில் இருந்தே இந்தியப் பெருங் கடல் பகுதிகளில் வந்து செல்லும் கப்பல்களில் வரும் நபர்கள் மூலம் பல மொழிகள் தெரிந்த காரணத்தால் அந்தக் கப்பலில் வந்தவர்களிடமும் பேச்சு கொடுத்தனர். அவர்கள் வணி கத்திற்காக வந்தோம் என்று கூறி னார்கள். 

சிலர் அவர்களை கரைக்கு வர அனுமதித்தனர். சிலரோ அவர்கள் கொள்ளையர்கள் என்றனர். இந்த நிலையில் மழை துவங்கிவிட்டதால் படகுகளை இறக்கி கரைக்குச் செல்ல முதலில் படை வீரர்களை அனுப்பு கிறார் அந்தக்கப்பலில் வந்த கேப்டன். கரையில் இருந்த சிறு படையினரோடு மோதலில் ஈடுபட கரையில் உள்ள வர்கள் மோதலைக் கைவிட்டு பேச்சு வார்த்தை நடத்த ஒப்புக் கொண்டனர்.

அதன் பிறகு 17.05.1448-ஆம் நாள் கேப்டன் வாஸ்கோட காமா கோழிக் கோடு கடற்கரையில் கால் பதித்தார் இந்திய வரலாற்றில், இந்த நாள் பிற்காலத்தில் ஏற்படுத்த இருக்கும் கலாச்சார, அரசியல் மாற்றங்களைப் பற்றி யாருக்குமே அன்று தெரிந்திருக்க வாய்ப் பில்லை. 

பார்த்தலோமிய டயஸ் ஆலோ சனையைக் கேட்டு அவர் காட்டிய வழியைப் பயன்படுத்திக் கொண்டு, நன்னம்பிக்கை முனை யைத் தாண்டி, இந்தியாவின் மேற்குக் கடற்கரை யோரம், கேரளப் பகுதியின், கள்ளிக் கோட் டைக்கு (கோழிக்கோடு) வாஸ் கோடகாமா எனும் போர்த்துக் கீசியர் முதன் முதலில் அப்போது வந்து சேர்ந்தார்.

வாஸ்கோடகாமாவின்  கடல் வழிப் பாதை கண்டுபிடிப்பும், வரு கையும், இந்திய அரசியலிலும், வாணிகத்திலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

வாஸ்கோடா காமாவைத் தொடர்ந்து டச்சுக்காரர்கள் இறுதி யாக ஆங்கிலேயர்கள் இந்தி யாவை வந்தடைந்தனர். இவர் களில் ஆங்கிலே யர்கள் இந்தியா முழுவதும் வலுவாக தனது அதிகா ரத்தை உறுதிப் படுத்திக் கொண்டனர்.  அய்ரோப்பியர்க ளின் வருகை, அவர்களது ஆளுமை பல்வேறு விமர்சனங் களை ஏற்படுத்தினாலும் அவர்கள் ஏற்படுத்திய கலாச்சார மாற்றம் இன்று ஒவ்வொரு இந்திய தீபகற்பவாழ் மக்கள் மீதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது, உண்மை யல்லவா?

No comments:

Post a Comment