மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் காவல்துறையினரின் நடவடிக்கை - ராகுல் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 5, 2023

மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் காவல்துறையினரின் நடவடிக்கை - ராகுல் கண்டனம்

புதுடில்லி, மே 5 - தலைநகர் டில்லியில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழலில், வீராங்கனைகளை நேற்றிரவு காவல்துறையினர் கையாண்ட விதத்துக்கு காங்கிரஸ் மேனாள் எம்.பி. ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.   தனது ட்விட்டர் பக்கத்தில் வீராங்கனைகள் சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத் ஆகியோருடன் காவல்துறையினர் கைகலப்பில் ஈடுபட்ட காட்சிப் பதிவை பகிர்ந்த ராகுல் காந்தி, "பாஜக எப்போதும் இந்தியாவின் மகள்கள் துன்புறுத்தப்படுவதைக் கண்டு வருந்தியதில்லை. விளையாட்டு வீராங்கனைகள் மீதான இந்த அத்துமீறல் அவமானகரமானது. பெண்களைப் பாதுகாப்போம் என்ற பாஜக முழக்கம் வெற்று கோஷம்" என்று தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment