வைக்கம் போராட்டம் - சேரன்மாதேவி குருகுல போராட்டம் நூற்றாண்டு விழா தொடர் பிரச்சாரக் கூட்டங்கள் திருப்பூர் கழக மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 27, 2023

வைக்கம் போராட்டம் - சேரன்மாதேவி குருகுல போராட்டம் நூற்றாண்டு விழா தொடர் பிரச்சாரக் கூட்டங்கள் திருப்பூர் கழக மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

 



திருப்பூர்,மே27-
திருப்பூர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட் டம், பெரியார் புத்தக நிலையத்தில் 22.05.2023 அன்று பிற்பகல் 3 மணி யளவில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை 

இரா.ஜெயக்குமார் தலைமையேற்று, 90 வயதை தாண்டியும் இச்சமூக முன்னேற்றத்திற்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் தமி ழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தொடர் பணியை எடுத்துக் கூறி, எதிர்வரும் 2025ஆம் ஆண்டு சுய மரியாதை இயக்கத்தின் நூற் றாண்டு விழா முன்னிட்டு தமிழ் நாடு முழுவதும் கழக அமைப்பு இல்லாத ஊர்களே இருக்கக் கூடாது.

கழகக் கொடி பறக்காத இடம் இருக்கக் கூடாது என்பதை வலியு றுத்தி, அனைத்து பகுதிகளிலும் தெருமுனைப் பிரச்சாரங்களை நடத்தி பயிற்சி பட்டறைகளை நடத்தி இளைஞர்களை மாணவர் களை இயக்கத்தின் பால் ஈர்த்து புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்  என்பதை சுட்டிக்காட்டி உரையாற்றினார்.

இந்நிகழ்விற்கு திருப்பூர் கழக மாவட்ட தலைவர் யாழ்.ஆறுச் சாமி, திருப்பூர் கழக மாவட்ட செயலாளர் பா.குமரவேல், மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் 

மு.கிருஷ்ணவேணி ஆகியோர் முன்னிலை ஏற்று  உரையாற்றினர். 

இந்நிகழ்வில் பல்லடம் கோ.குண சேகரன், தி.வீரமுத்து, பொதுக்குழு உறுப்பினர் தாராபுரம் நா.சக்தி வேல்,  திருப்பூர் பெரியார் புத்தக நிலைய பொறுப்பாளர் க. மைனர், மாநில இளைஞரணி துணை செயலாளர்கள் முனிஸ்வரன், முனைவர் வே. ராஜவேல், மாவட் டத் துணைத் தலைவர் முத்து.முருகேசன், காங்கேயம் நகர செய லாளர் பெ.மணிவேல், அவிநாசி பகுத்தறிவாளர் கழக பொறுப் பாளர் குமாரராஜா, திருப்பூர் மாநகர செயலாளர் பா.மா.கருணா கரன் ஆகியோர் கலந்து கொண்டு இயக்க செயல்பாடுகள் குறித்து கருத்துரையாற்றினார்  தலைமைக் கழக அமைப்பாளர்  ஈரோடு த.சண்முகம்  இறுதியாக சிறப்புரை யாற்றினார்.

தீர்மானங்கள் விவரம் வருமாறு:

தீர்மானம் 1: இரங்கல் தீர்மானம்

கோவை மண்டல செயலாளர் ச.சிற்றரசு, மேனாள் திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் சிவசாமி ஆகியோரது மறைவிற்கு இக்கூட் டம் ஆழ்ந்த இரங்கலும் வீரவணக் கத்தையும் தெரிவித்துக் கொள் கிறது.

தீர்மானம் 2: 

மே - 13 அன்று ஈரோட்டில், தமி ழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற திரா விடர் கழக பொதுக்குழுவில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களை ஏற்று செயல் படுத்துவது என முடிவு செய்யப் படுகிறது.

தீர்மானம் 3: 

திருப்பூர் கழக மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு, சேரன்மாதேவி குருகுல போராட்ட நூற்றாண்டு விழா தெருமுனைக் கூட்டங்களை தொடர்ச்சியாக நடத் துவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 4: 

திருப்பூர் மாவட்டத்தில் ஒரு நாள் பெரியாரியல் பயிற்சிப் பட் டறை நடத்துவது எனவும், புதிய மாணவர்கள், இளைஞர்களை அதில் பங்கேற்கச் செய்வது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 5: 

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய, நகரம், கிராமங் களிலும் புதிய உறுப்பினர்களை சேர்த்து புதிய கிளைக் கழகங்களை உருவாக்குவதுடன், கிளைக் கழகங் கள்தோறும் கழகக் கொடியை ஏற்று வது என தீர்மானிக்கப்படுகிறது.


No comments:

Post a Comment