மதிப்பிற்குரிய தருமபுர ஆதீன மகா சன்னிதானம் அவர்களுக்கு வணக்கம்.
24-5-2023 சீர்காழி சட்டைநாதர் ஆலய குட முழுக்கு விழாவிற்கு வந்து முகாமிட் டுள்ளீர்கள். அரசியல்வாதிகள் தோற்றுப் போகும் அளவுக்கு ஊர் முழுக்க பெரிய அளவு வரவேற்பு பதா கைகள்! யானை, குதிரை, ஒட்டகம் முன்னேவர ஊர்வலங்கள். (சைவத் தில் ஒட்டகம் எங்கே வந்ததெனத்தெரியவில்லை)
முத்தாய்ப்பாக பூனைப்படை பாதுகாப்பு.!!
சமய சம்பிரதாயம் , நடைமுறை, காலங்கால பழக்கம் என்று சொல்லி மனிதனை மனிதன் சுமக்கும் பல்லக்கில் தாங்கள் ஏறிவரும் பட்டினப்பிரவேசத்தை சமூக உணர்வாளர்கள் எதிர்த்தபோது பதைத்தீர்கள். அடம்பிடித்து ஆட்சியாளர்கள் வரை சென்று சாதித்தீர்கள்.
தாங்கள் சாதித்த அதே சம்பிரதாயமும், காலங்காலமான நடைமுறையும், வழக்கமும் தான் இந்த பூனைப்படை பாதுகாப்புமா? அதுவும் கோயிலுக்குள்? இதை எந்த ஆகமம் அனு மதிக்கிறது?
விளங்கவைப்பது உங்கள் கடமை.
- ஞான. வள்ளுவன்
வைத்தீசுவரன்கோயில்.
No comments:
Post a Comment